DHYANAM |
|
1 (Page#) |
nAttai |
MURUGA MURUGA
muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
|
நாட்டை |
முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
|
RAJI1 |
medium |
STHUTHI |
|
1 (Page#) |
nAttai |
VINAAYAKAR STHUTHI
Gajananam Bhuta Ganadhi Sevitam Kapittha Jambu Palasara Bhaksitam Uma Sutam Shoka Vinasha Karanam Namami Vignesvara Pada Pankajam
sadA bAlaroopApi vighnAdhi hanthri mahAdanthi vaktrApi panchAsyamAnyA vidheendhrAdhi mrigyA gaNeshAbhidhAme vidhatthAm shriyam kApi kalyANamurthi
|
நாட்டை |
விநாயகர் ஸ்துதி
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:
|
|
small |
STHUTHI |
|
2 (Page#) |
nAttai |
kandhar anubhoothi (Sthuthi)
nenjak kanakallu negizhn dhurugath thanjaththaruL shaNmuganuk kiyalsEr senchoR punaimAlai siRandhidavE panjak karavAnai padham paNivAm.
|
நாட்டை |
கந்தர் அநுபூதி (ஸ்துதி)
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
|
|
small |
STHUTHI |
|
2 (Page#) |
nAttai |
kandharalankaaram (Sthuthi)
adal aruNaith thirrukkOburaththE andha vAyilukku vada arugil sendRu kaNdukoNdEn varuvAr thalaiyil thadapada enappadu kuttudan sarkkarai mokkiyagaik kadathada kumbak kaLitRukku iLaiya kaLitRinaiyE.
|
நாட்டை |
கந்ததரலங்காரம் (ஸ்துதி)
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
|
|
small |
STHUTHI |
|
2 (Page#) |
nAttai |
kandharandhaadhi (Sthuthi)
vaaraNatthaanai ayanai viNNOrai malarkkaratthu vaaraNatthaanai mahatthuvendrOn maindhanai thuvacha vaaraNatthaanai thuNai nayandhaanai vayalaruNai vaaraNatthaanai thiRaikoNda yaanaiyai vaazhtthuvanE.
|
நாட்டை |
கந்ததரந்தாதி (ஸ்துதி)
வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
|
|
small |
STHUTHI |
|
2 (Page#) |
nAttai |
Vinayakar Charanam
nitthiyaanandhamaagi nishkaLa swaroopamaagi sakthiyaay sivamumaay sthaaNuvaay ulagukellaam siddhiyaay mukthiyaay thigazh paramaartthamaagi atthiyin uruvamaana aNNalaip paNivOmE.
eppOdhum enmanam uniNai adithanai naada seppaRkariya unnai dhinamum naan koNdaada ippiRavippiNi ini varaamaR pOga thappidham illaamal shaNmugan thanaip paada undhan manadhu vaitthu aruL purivaay! atthi mugamaay vandha aadhiyE! anaadhiyE! suddha nirguNamaana suyaparam jOthiyE! aindhu karatthu aanaimugap perumaaLE! unnai mattavizh malarkodu paNivOm!
|
நாட்டை |
விநாயகர் சரணம்
நித்யானந்த மாகி நிஷ்கள ஸ்வரூபமாகி சக்தியாய் சிவமுமாகி ஸ்தாணுவாய் உலகுக்கெல்லாம் சித்தியாய் முக்தியாகித் திகழ் பரமார்தமாகி அத்தியின் உருவமான அண்ணலைப் பணிகுவோமே.
எப்போதும் என்மனம் உன் இணையடிதனை நாட செப்பற்கரிய உன்னை தினமும் கொண்டாட இப்பிறவிப்பிணி இனி வராமற் போக தப்பிதம் இல்லாமல் ஷண்முகன் தனைப் பாட உந்தன் மனது வைத்து அருள்புரிவாய் ! அத்தி முகமாய் வந்த ஆதியே ! அனாதியே ! சுத்த நிர்குணமான சுய பரஞ்சோதியே ! ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே ! உன்னை மட்டவிழ் மலர்கொடு பணிவோம் !
|
|
medium |
VINAYAKAR STHUTHI |
|
1 |
nAttai |
Kaithala Niraikani
kaiththala niRaikani appamodu avalpori kappiya karimugan ...... adipENi
katridum adiyavar buddhiyil uRaibava kaRpagam enavinai ...... kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan maRporu thiraLbuya ...... madhayAnai
maththaLa vayiRanai uththami pudhalvanai mattavizh malarkodu ...... paNivEnE
muththamizh adaivinai muRpadu girithanil muRpada ezhudhiya ...... mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham acchadhu podiseydha ...... athidheerA
aththuyar adhukodu subbira maNipadum appunam adhanidai ...... ibamAgi
akkuRa magaLudan acchiRu muruganai akkaNam maNamaruL ...... perumALE.
|
நாட்டை |
கைத்தல நிறைகனி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
VINAYAKAR STHUTHI |
|
2 |
nAttai / mOhanam |
pakkarai vichithramaNi
pakkaraivi chithramaNi poRkalaNai ittanadai pakshiyenum ugrathura ...... gamuneeba
pakkuvama larththodaiyum akkuvadu pattozhiya patturuva vittaruLkai ...... vadivElum
dhikkadhuma dhikkavaru kukkudamum rakshaitharu chitradiyu mutRiyapan ...... niruthOlum
seyppadhiyum vaiththuyarthi ruppugazhvi ruppamodu seppenae nakkaruLgai ...... maRavEnE
ikkavarai naRkanigaL sarkkaraipa ruppudaney etporiya valthuvarai ...... iLaneervaN
dechchilpaya Rappavagai pachcharisi pittuveLa rippazhami dippalvagai ...... thanimUlam
mikkaadi siRkadalai bhakshaName nakkoLoru vikkinasa marththanenum ...... aruLAzhi
veRpakudi lachchadila viRparama rappararuL viththagama ruppudaiya ...... perumALE.
|
நாட்டை / மோஹனம் |
பக்கரை விசித்ரமணி
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
STHUTHI |
|
4 (Page#) |
hamsadhwani / Anandhabhairavi |
agaval sthuthi
seedhak kaLaba senthaamaraipoom paadhach chilambu pala isai paada ponnarai nyaaNum poonthugil aadaiyum vanna marungil vaLarndhazha geRippa pEzhai vayiRum perumbaarak kOdum vEzha mugamum viLangu chindhooramum anju karamum angusa paasamum nenjiR kudikonda neela mEniyum naandra vaayum naaliru buyamum moondru kaNNum mummadha chuvadum iraNdu seviyum ilangu pon mudiyum thiRaNda muppurinool thigazhoLi maarbum soRpadham kadandha thuriya mey nyaana aRpudham nindra kaRpagak kaLiRE ! muppazha nugarum mooshika vaahana ! ippozhudhu engaLai aatkoLLa vEndith thaayaay emakkutthaan ezhundharuLE vitthaga vinaayaka viraikazhal saraNE
seertharu moola chezhun chudar viLakkE kaarniRa mEni kaRpaga kaLiRE allal vinaiyai aRutthidu nyaana vallabai thannai maruviya maarbaa pongara vaNindha puNNiya moorthi sankaran aruLiya saRguru vinaayakaa veNNeeRaNiyum vimalan pudhalvaa peNNaam umaiyaaL petridum dhEvE panchaakshara nilaipaalitthu enakku selvamum kalviyum seerum peruga putthiranE tharum puNNiya mudhalE ippozhudhu engaLai aatkoLLa vEndith thaayaay yemakkutthaan ezhundharuLE vitthaga vinaayakaa viraikazhal saraNE
|
ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி |
அகவல் ஸ்துதி
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! இப்பொழு தென்னை எங்களை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குஎமக்குத் தானெழுந் தருளே வித்தக விநாயக விரைகழல் சரணே.
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை அறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி சங்கரனருளிய சற்குரு விநாயகா வெண்ணீ றணியும் விமலன் புதல்வா பெண்ணாம் உமையாள் பெற்றிடுந்தேவே பஞ்சாட்சர நிலைபாலித்து எனக்குச் செல்வமும் கல்வியும் சீரும் பெருக புத்திரனே தரும் புண்ணிய முதலே இப்பொழுது எங்களை ஆட்கொள வேண்டித் தாயாய் எமக்குத்தான் எழுந்தருளே வித்தக விநாயக விரைகழல் சரணே.
|
|
large |
VINAYAKAR STHUTHI |
|
3 |
hamsadhwani / Anandhabhairavi |
umbartharu dhEnumaNi
umbartharu dhEnumaNi ...... kasivAgi oNkadaliR thEnamudhath ...... thuNarvURi
inbarasaththE parugip ...... palakAlum endhanuyirk kAdharavut ...... RaruLvAyE
thambithanak kAgavanath ...... thaNaivOnE thandhaivalath thAlaruLkaik ...... kaniyOnE
anbarthamak kAnanilai ...... poruLOnE ainthukarath thAnaimugap ...... perumALE.
|
ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி |
உம்பர்தருத் தேநுமணி
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
|
RAJIG1 |
small |
VINAYAKAR STHUTHI |
|
4 |
hamsadhwani |
ninadhu thiruvadi
ninadhu thiruvadi saththima yiRkodi ninaivu karudhidu buddhi koduththida niRaiya amudhusey muppazham appamu ...... nigazhpAlthEn
nediya vaLaimuRi ikkodu laddugam niRavil arisi paruppaval etpori nigaril inikadha likkani vargamum ...... iLaneerum
manadhu magizhvodu thottaka raththoru magara chalanidhi vaiththathu dhikkara vaLaru karimuga otRaima ruppanai ...... valamAga
maruvu malarpunai thoththira soRkodu vaLarkai kuzhaipidi thoppaNa kuttodu vanasa paripura poRpadha arcchanai ...... maRavEnE
thenana thenathena theththena nappala siRiya aRupadha moyththudhi rappunal thiraLum uRusadhai piththani Nakkudal ...... seRimULai
seruma udharani rappuse rukkudal niraiya aravani Raiththaka Laththidai thimidha thimithimi maththaLi dakkaigaL ...... jegajEjE
enave thuguthugu thuththena oththugaL thudigaL idimiga voththumu zhakkida dimuda dimudimu dittime naththavil ...... ezhumOsai
igali alagaigaL kaippaRai kottida iraNa bayiRavi sutruna diththida edhiru nisichara raibeli ittaruL ...... perumALE.
|
ஹம்ஸத்வனி |
நினது திருவடி
நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
|
RAJIG1 |
large |
STHUTHI |
|
7 (Page#) |
|
vinAyakar nAmAvaLi
siddhi vinaayakaa charaNam saraNam sivan thiru kumaraa charaNam saraNam aththi mugaththavaa charaNam saraNam aRumugan sOdharaa charaNam saraNam kaariya mudhalvaa charaNam saraNam karumbin kanivE charaNam saraNam sooranai azhiththaay charaNam saraNam praNavach chudarE charaNam saraNam mOdhakap priyanE charaNam saraNam mooshika vaahanaa charaNam saraNam vEdha kaRpagamE charaNam saraNam vinaigaL azhippOy charaNam saraNam paarvathi maindhaa charaNam saraNam bakthargaL thavamE charaNam saraNam paarvalam vandhavaa charaNam saraNam pazhamE koNdavaa charaNam saraNam valimaik kundramE charaNam saraNam vaRiyOr varamE charaNam saraNam uLamE niRaindhavaa charaNam saraNam uNmaip polivE charaNam saraNam kariya niRaththavaa charaNam saraNam kayamai azhippavaa charaNam saraNam poriyai chuvaippavaa charaNam saraNam bhuvanam aNaippavaa charaNam saraNam paambaNi koNdavaa charaNam saraNam pangayath thamarndhavaa charaNam saraNam sOmbal ozhippavaa charaNam saraNam jOthi aruL oLi charaNam saraNam katravar thuNaiyE charaNam saraNam kavidhaiyin uyirE charaNam saraNam vetriyin thiruvE charaNam saraNam vEndha gaNapathi charaNam saraNam
chindhiththavark karuL gaNapathi jaya jaya seeriya aanaik kandrE jaya jaya anbudai amararaik kaappaay jaya jaya aavith thuNaiyE gaNapathi jaya jaya iNdai sadai mudi iRaivaa jaya jaya eesan thandharuL mahanE jaya jaya unniya karumam mudippaay jaya jaya oornava sandhi ugandhaay jaya jaya em perumaanE iRaivaa jaya jaya Ezhulagam thozha nindraay jaya jaya aiyaa gaNapathi nambiyE jaya jaya otrai maruppudai viththagaa jaya jaya Ongiya aanaik kandrE jaya jaya auviya milla aruLE jaya jaya akkara vasthu aanavaa jaya jaya gaNapathi em vinai kaLaivaay jaya jaya
|
|
விநாயகர் நாமாவளி
சித்தி விநாயகா சரணம் சரணம் சிவன் திருக்குமர சரணம் சரணம் அத்தி முகத்துவ சரணம் சரணம் அறுமுகன் சோதர சரணம் சரணம் காரிய முதல்வ சரணம் சரணம் கரும்பின் கனிவே சரணம் சரணம் சூரனை அழித்தாய் சரணம் சரணம் பிரணவச் சுடரே சரணம் சரணம் மோதகப் ப்ரியனே சரணம் சரணம் மூஷிக வாகன சரணம் சரணம் வேத கற்பகமே சரணம் சரணம் வினைகள் அழிப்போய் சரணம் சரணம் பார்வதி மைந்த சரணம் சரணம் பக்தர்கள் தவமே சரணம் சரணம் பார்வலம் வந்தவ சரணம் சரணம் பழமே கொண்டவ சரணம் சரணம் வலிமைக் குன்றமே சரணம் சரணம் வறியோர் வரமே சரணம் சரணம் உளமே நிறைந்தவ சரணம் சரணம் உண்மைப் பொலிவே சரணம் சரணம் கரிய நிறத்தவ சரணம் சரணம் கயமை அழிப்பவ சரணம் சரணம் பொரியைச் சுவைப்பவ சரணம் சரணம் புவனம் அணைப்பவ சரணம் சரணம் பாம்பணி கொண்டவ சரணம் சரணம் பங்கயத் தமர்ந்தவ சரணம் சரணம் சோம்பல் ஒழிப்பவ சரணம் சரணம் ஜோதி அருள்ஒளி சரணம் சரணம் கற்றவர் துணையே சரணம் சரணம் கவிதையின் உயிரே சரணம் சரணம் வெற்றியின் திருவே சரணம் சரணம் வேந்த கணபதி சரணம் சரணம்
சிந்தித் தவர்க்கருள் கண்பதி ஜெய ஜெய சீரிய ஆனைக்கன்றே ஜெய ஜெய அன்புடை அமரரைக் காப்பாய் ஜெய ஜெய ஆவித் துணையே கணபதி ஜெய ஜெய இண்டைச் சடைமுடி இறைவா ஜெய ஜெய ஈசன் தந்தருள் மகனே ஜெய ஜெய உன்னிய கருமம் முடிப்பாய் ஜெய ஜெய ஊர்நவ சந்தி உகந்தாய் ஜெய ஜெய எம்பெருமானே இறைவா ஜெய ஜெய ஏழுல குந்தொழ நின்றாய் ஜெய ஜெய ஐயா கணபதி நம்பியே ஜெய ஜெய ஒற்றை மருப்புடை வித்தகா ஜெய ஜெய ஓங்கிய ஆனைக் கன்றே ஜெய ஜெய ஔவிய மில்லா அருளே ஜெய ஜெய அஃகர வஸ்து ஆனவா ஜெய ஜெய கணபதி என்வினை களைவாய் ஜெய ஜெய
|
RAJIG1 |
large |
STHUTHI |
|
8 (Page#) |
|
mukthi vinAyakar agaval
Arahara siva siva (pOttri) namo namo Aaku vaakananey (pOttri) namo namo Ibamugath thohney (pOttri) namo namo Eeswaran maganey (pOttri) namo namo Umaiyaal sudhaney (pOttri) namo namo Oonir periyhoi (pOttri) namo namo Emaiyaal bavaney (pOttri) namo namo Yehzhai pangaalaai (pOttri) namo namo Ayyaa thuiyaai (pOttri) namo namo Ottrai maruppaai (pOttri) namo namo Ohdhiya maraiyeh (pOttri) namo namo Avvaik kiniyaai (pOttri) namo namo Agarap poruley (pOttri) namo namo Gananaa yaganey (pOttri) namo namo Kirubaik kadaley (pOttri) namo namo Geethagin giniyaai (pOttri) namo namo Gunjarak kandrey (pOttri) namo namo Kurum baraney (pOttri) namo namo Gedhiyalip pavaney (pOttri) namo namo Keylvi vilaasaa (pOttri) namo namo Kaiyaindh dhavaney (pOttri) namo namo Kozhundhidu mudhaley (pOttri) namo namo Khoveh dheyveh (pOttri) namo namo Kouvaith thunaiyeh (pOttri) namo namo Sadhurmaraip poruley (pOttri) namo namo Saaimaraich seviyaai (pOttri) namo namo Sivan kanmaniyeh (pOttri) namo namo Seeva sanjidhamey (pOttri) namo namo Surudhi vilakkey (pOttri) namo namo Soora sangkaaraa (pOttri) namo namo Jeyajeya vinaayakaa (pOttri) namo namo Seyinoor karasey (pOttri) namo namo Saivak guruvey (pOttri) namo namo Sollum poruley (pOttri) namo namo Sohga vinaasaa (pOttri) namo namo Souriyak kalirey (pOttri) namo namo Thandaik kaalaai (pOttri) namo namo Thaamaraik karaththaai (pOttri) namo namo Thirumaal marugaa (pOttri) namo namo Theengu theerppavaney (pOttri) namo namo Thumbik kaiyaai (pOttri) namo namo Thoola sookkumaththoi (pOttri) namo namo Dheiva sigaamani (pOttri) namo namo Dhevargal dhevey (pOttri) namo namo Thaiyal vallabaiyaai (pOttri) namo namo Thondark kidhamey (pOttri) namo namo Thoththirap piriyaai (pOttri) namo namo Thouvai therppavaney (pOttri) namo namo Nambundh thunaiyeh (pOttri) namo namo Naaga bhooshananey (pOttri) namo namo Niththan madhalaai (pOttri) namo namo Neerani bavaney (pOttri) namo namo Nugarumaa yamudhey (pOttri) namo namo Nooraap peyrey (pOttri) namo namo Netrik kannaai (pOttri) namo namo Neymiyandh thiraththaai (pOttri) namo namo Naivalath thurandhoi (pOttri) namo namo Nondhaark kaavaai (pOttri) namo namo Nhoi theerppavaney (pOttri) namo namo Nouvi tharththoi (pOttri) namo namo Padhino rukaiyaai (pOttri) namo namo Paabha vinaasaa (pOttri) namo namo Pinikku marundhey (pOttri) namo namo Peedai theerppavaney (pOttri) namo namo Budhdhi thandhavaney (pOttri) namo namo Poomagal marugaa (pOttri) namo namo Petrohr magizhey (pOttri) namo namo Peyzhai vayittraai (pOttri) namo namo Paiyara vanindhaai (pOttri) namo namo Pondraak kundrey (pOttri) namo namo Bhodhap poruleh (pOttri) namo namo Bouva vanaththoi (pOttri) namo namo Madhiyalip pavaney (pOttri) namo namo Maadhaiyil vaazhvey (pOttri) namo namo Migudhi yaanavaney (pOttri) namo namo Meedhor veyndhey (pOttri) namo namo Mukkan nudaiyaai (pOttri) namo namo Moovarin mudhalaai (pOttri) namo namo Meiporul kiriyeh (pOttri) namo namo Meylaam padhamey (pOttri) namo namo Mainira maniyeh (pOttri) namo namo Mozhivaark karuley(pOttri) namo namo Mhodhagak kaiyaai (pOttri) namo namo Mouli thariththoi (pOttri) namo namo Vallabai manaalaa (pOttri) namo namo Vaamana roopaa (pOttri) namo namo Viththaik kiraivaa (pOttri) namo namo Veerathan daiyaney (pOttri) namo namo Uththama dheyvey (pOttri) namo namo Oonandh thurappaai (pOttri) namo namo Veyilavar kiniyaai (pOttri) namo namo Veyndili naayagaa (pOttri) namo namo Vaiyam purandhdhoi (pOttri) namo namo Voudhar paraney (pOttri) namo namo Oppilaa maniyeh (pOttri) namo namo Omporu laalaa (pOttri) namo namo VauvvunaR paranE (pOttri) namo namo Mahaa ganapathiyeh (pOttri) namo namo.
|
|
முக்தி விநாயகர் அகவல்
அரகர சிவ சிவ (போற்றி) நமோ நமோ ஆகு வாகனனே (போற்றி) நமோ நமோ இபமுகத் தோனே (போற்றி) நமோ நமோ ஈசுவரன் மகனே (போற்றி) நமோ நமோ உமையாள் சுதனே (போற்றி) நமோ நமோ ஊனிற் பெரியோய் (போற்றி) நமோ நமோ எமையாள் பவனே (போற்றி) நமோ நமோ ஏழை பங்காளாய் (போற்றி) நமோ நமோ ஐயா துய்யாய் (போற்றி) நமோ நமோ ஒற்றை மருப்பாய் (போற்றி) நமோ நமோ ஓதிய மறையே (போற்றி) நமோ நமோ ஒளவைக் கினியாய் (போற்றி) நமோ நமோ அகரப் பொருளே (போற்றி) நமோ நமோ கணநா யகனே (போற்றி) நமோ நமோ கிருபைக் கடலே (போற்றி) நமோ நமோ கீதகிண் கிணியாய் (போற்றி) நமோ நமோ குஞ்சரக் கன்றே (போற்றி) நமோ நமோ கூறும் பரனே (போற்றி) நமோ நமோ கெதியளிப் பவனே(போற்றி) நமோ நமோ கேள்வி விலாசா (போற்றி) நமோ நமோ கையைந் தவனே (போற்றி) நமோ நமோ கொழிந்திடு முதலே (போற்றி) நமோ நமோ கோவே தேவே (போற்றி) நமோ நமோ கெளவைத் துணையே (போற்றி) நமோ நமோ சதுர்மறைப் பொருளே (போற்றி) நமோ நமோ சாய்மறைச் செவியாய் (போற்றி) நமோ நமோ சிவன் கண்மணியே (போற்றி) நமோ நமோ சீவ சஞ்சிதமே (போற்றி) நமோ நமோ சுருதி விளக்கே (போற்றி) நமோ நமோ சூர சங்காரா (போற்றி) நமோ நமோ ஜெயஜெய விநாயகா (போற்றி) நமோ நமோ சேய்நூற் கரசே (போற்றி) நமோ நமோ சைவக் குருவே (போற்றி) நமோ நமோ சொல்லும் பொருளே (போற்றி) நமோ நமோ சோக விநாசா (போற்றி) நமோ நமோ செளரியக் களிறே (போற்றி) நமோ நமோ தண்டைக் காலாய் (போற்றி) நமோ நமோ தாமரைக் கரத்தாய் (போற்றி) நமோ நமோ திருமால் மருகா (போற்றி) நமோ நமோ தீங்கு தீர்ப்பவனே (போற்றி) நமோ நமோ தும்பிக் கையாய் (போற்றி) நமோ நமோ தூல சூக்குமத்தோய் (போற்றி) நமோ நமோ தெய்வ சிகாமணி (போற்றி) நமோ நமோ தேவர்கள் தேவே (போற்றி) நமோ நமோ தையல் வல்லபையாய் (போற்றி) நமோ நமோ தொண்டர்க் கிதமே (போற்றி) நமோ நமோ தோத்திரப் பிரியாய் (போற்றி) நமோ நமோ தெளவை தீர்ப்பவனே (போற்றி) நமோ நமோ நம்புந் துணையே (போற்றி) நமோ நமோ நாக பூஷணனே (போற்றி) நமோ நமோ நித்தன் மதலாய் (போற்றி) நமோ நமோ நீறணி பவனே (போற்றி) நமோ நமோ நுகருமா யமுதே (போற்றி) நமோ நமோ நூறாப் பேரே (போற்றி) நமோ நமோ நெற்றிக் கண்ணாய் (போற்றி) நமோ நமோ நேமியந் திரத்தாய் (போற்றி) நமோ நமோ நைவளத் துரந்தோய் (போற்றி) நமோ நமோ நொந்தார்க் காவாய் (போற்றி) நமோ நமோ நோய்தீர்ப் பவனே (போற்றி) நமோ நமோ நெளவி தர்த்தோய் (போற்றி) நமோ நமோ பதினோ ருகையாய் (போற்றி) நமோ நமோ பாப விநாசா (போற்றி) நமோ நமோ பிணிக்கு மருந்தே (போற்றி) நமோ நமோ பீடை தீர்ப்பவனே (போற்றி) நமோ நமோ புத்தி தந்தவனே (போற்றி) நமோ நமோ பூமகள் மருகா (போற்றி) நமோ நமோ பெற்றோர் மகிழே (போற்றி) நமோ நமோ பேழை வயிற்றாய் (போற்றி) நமோ நமோ பையர வணிந்தாய் (போற்றி) நமோ நமோ பொன்றாக் குன்றே (போற்றி) நமோ நமோ போதப் பொருளே (போற்றி) நமோ நமோ பெளவ வணத்தோய் (போற்றி) நமோ நமோ மதியளிப் பவனே (போற்றி) நமோ நமோ மாதையில் வாழ்வே (போற்றி) நமோ நமோ மிகுதி யானவனே (போற்றி) நமோ நமோ மீதோர் வேந்தே (போற்றி) நமோ நமோ முக்கண் ணுடையாய் (போற்றி) நமோ நமோ மூவரின் முதலாய் (போற்றி) நமோ நமோ மெய்பொருட் கிரியே (போற்றி) நமோ நமோ மேலாம் பதமே (போற்றி) நமோ நமோ மைநிற மணியே (போற்றி) நமோ நமோ மொழிவார்க் கருளே (போற்றி) நமோ நமோ மோதகக் கையாய் (போற்றி) நமோ நமோ மௌலி தரித்தோய் (போற்றி) நமோ நமோ வல்லபை மணாளா (போற்றி) நமோ நமோ வாமன ரூபா (போற்றி) நமோ நமோ வித்தைக் கிறைவா (போற்றி) நமோ நமோ வீரதண் டையனெ (போற்றி) நமோ நமோ உத்தம தேவே (போற்றி) நமோ நமோ ஊனந் துறப்பாய் (போற்றி) நமோ நமோ வெயிலவற் கினியாய் (போற்றி) நமோ நமோ வேண்டி விநாயகா (போற்றி) நமோ நமோ வையம் புரந்தோய் (போற்றி) நமோ நமோ வெளதர் பரனே (போற்றி) நமோ நமோ ஒப்பிலா மணியே (போற்றி) நமோ நமோ ஓம்பொரு ளாளா (போற்றி) நமோ நமோ வௌவுநற் பரனே (போற்றி) நமோ நமோ மகா கணபதியே (போற்றி) நமோ நமோ.
|
|
large |
GURU |
|
15 (Page#) |
rAga mAligai |
Guru Vanakkam
andhaadhi illaa iRaivanukku andhaadhi andruraiththum nandhaa vaguppu alankaaram avarkkE nanipunaindhum mundhaadharavil avan pugazh boothi mutrum sonna enthaay aruNagirinaathaa emmai nee Endru aruLE!
aruvamum uruvamaagi aaadhiyaay palavaay ondraay brammamaay nindra jOthi pizhambadhOr mEniyaagi karuNaikoor mugangaLaaRum karamadhu panniraNdum koNdE oruthiru muruganaay shaNmuganaay shataaksharanaay saravaNabavanaay kaarthikEyanaay ulagamuyya vandhu aangu udhiththu
aaRunilai endru mudhalaana parangiri chendhoor thiruppazhani Eragam thiruththaNigai sOlaimalai mudhalaana padhigaL pala aayirangaL malaigaL vegukOdi nindra andham aadhi illaa guhanE engaL guruvaay varuvaay aruLvaay guhanE !
uruvaay aruvaay uLathaay iladhaay maruvaay malaraay maNiyaay oLiyaay karuvaay uyiraay gathiyaay vidhiyaay guruvaay varuvaay aruLvaay guhanE !
|
ராக மாலிகை |
குரு வணக்கம்
அந்தாதி யில்லா இறைவனுக்கு அந்தாதி யன்றுரைத்தும் நந்தா வகுப்பு அலங்காரம் அவர்க்கே நனிபுனைந்தும் முந்தாதரவில் அவன்புகழ் பூதிமுற்றும் சொன்ன எந்தாய் அருணகிரிநாதா எம்மை நீஏன்று அருளே !
அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரம்மமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்காளாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகனாய் ஷண்முகனாய் ஷடாக்ஷரனாய் சரவணபவனாய் கார்த்திகேயனாய் உலகமுய்ய வந்து ஆங்கு உதித்து
ஆறுநிலை என்று முதலான பரங்கிரி செந்தூர் திருப்பழநி ஏரகம் திருத்தணிகை சோலைமலை முதலான பதிகள் பலஆயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற அந்தம் ஆதிஇல்லா குகனே எங்கள் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !
|
|
large |
NOOL |
|
5 |
gauLai |
muththaith tharu
muththaiththaru paththith thirunakai aththikkiRai saththis saravaNa muththikkoru viththuk gurupara ...... enavOthum
mukkatpara maRkuc churuthiyin muRpattathu kaRpith thiruvarum muppaththumu varkkath thamararum ...... adipENap
paththuththalai thaththak kaNaithodu otRaikkiri maththaip poruthoru pattappakal vattath thikiriyil ...... iravAkap
paththaRkira thaththaik kadaviya pachchaippuyal mechchath thakuporuL patchaththodu ratchith tharuLvathum ...... orunALE
thiththiththeya oththap paripura nirththappatham vaiththup payiravi thikkotkana dikkak kazhukodu ...... kazhuthAdath
thikkuppari attap payiravar thokkuththoku thokkuth thokuthoku chithrappavu rikkuth thrikadaka ...... enavOthak
koththuppaRai kottak kaLamisai kukkukkuku kukkuk kukukuku kuththipputhai pukkup pidiyena ...... muthukUkai
kotputRezha natpatR RavuNarai vettippali yittuk kulakiri kuththuppada oththup poravala ...... perumALE.
|
கௌளை |
முத்தைத்தரு பத்தித்
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
|
RAJIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThirupparankunRam |
6 |
sAvEri |
unaith dhinanthozhu
unaiththi nanthozhu dhilanuna dhiyalbinai uraiththi lanpala malarkodun adiyiNai uRappa Nindhilan oruthava milanuna ...... dharuLmARA
uLaththu Lanbinar uRaividam aRigilan viruppo dunsika ramumvalam varugilan uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE
kanaiththe zhumpaga dathupidar misaivaru kaRuththa venchina maRalithan uzhaiyinar kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE
kalakku Runseyal ozhivaRa azhivuRu kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE
vinaiththa lanthanil alagaigaL kudhikoLa vizhukku daindhumey ugudhasai kazhuguNa viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA
miguththa paNpayil kuyilmozhi azhagiya kodichchi kungkuma mulaimuga duzhunaRai viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE
dhinaththi namchathur maRaimuni muRaikodu punaRcho rinthalar podhiyavi Navarodu chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE
thenaththe nanthana enavari aLinaRai thevitta anbodu paruguyar pozhilthigazh thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE.
|
சாவேரி |
உனைத் தினம்
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
|
RAJIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThirupparankunRam |
7 |
hindhOLam / varALi |
karuvadainthu paththuRRa
karuvadaindhu paththutra thingaL vayiRirundhu mutrip payindru kadaiyilvandhu dhiththukku zhandhai ...... vadivAgik
kazhuviyange duththucchu rantha mulaiyarundhu vikkakki dandhu kadhaRiyangai kottiththa vazhndhu ...... nadamAdi
arivadangaL katticcha dhangai idukudhambai poRchutti thaNdai avaiyaNindhu mutRikki Larndhu ...... vayadhERi
ariyapeNgaL natpaippu Narndhu piNivuzhandRu sutRiththi rintha dhamaiyumunkru paicchiththam endRu ...... peRuvEnO
iraviinthran vetRikku rangi narasarendRum oppatRa undhi iRaivaneNgi nakkarththa nendRum ...... neduneelan
eriyadhendRum rudraR chiRandha anumanendRum oppatRa aNdar evarumindha vargaththil vandhu ...... punamEva
ariyathanpa daikkarththa rendRu asurarthanki Laikkattai vendRa arimukundhan mecchutRa paNbin ...... marugOnE
ayanaiyumpu daiththucchi nandhu ulagaiyumpa daiththuppa rindhu aruLparangki rikkuLchi Randha ...... perumALE.
|
ஹிந்தோளம் / வராளி |
கருவடைந்து பத்துற்ற
கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து உலகமும்ப டைத்துப்ப ரிந்து அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThirupparankunRam |
8 |
sankarAbharanam / nIlAmbari |
Kanakan Thiralkinra
kanakanthiraL kindRape rungiri thanilvandhutha ganthagan endRidu kadhirminjiya cheNdaie Rindhidu ...... gathiyOnE
kadaminjia nanthavi dhampuNar kavaLanthanai unduva Larndhidu kariyindRuNai endrupi Randhidu ...... murugOnE
panaganthuyil kindrathi Rampunai kadalmunbuka daindhapa ramparar padarumpuyal endravar anbukoL ...... marugOnE
palathunbamu zhandruka langiya chiRiyanpulai yankolai yanpuri bavamindruka zhindhida vandharuL ...... purivAyE
anaganpeyar nindRuru Lunthiri puramunthiri vendRida inbudan azhalunthana kunthiRal koNdavar ...... pudhalvOnE
adalvandhumu zhangiyi dumpaRai dududuNdudu duNdudu duNdena adhirgindRida aNdane rindhida ...... varusUrar
manamunthazhal chendRida andRavar udalungkuda lungkizhi koNdida mayilvendRanil vandharu Lungana ...... periyOnE
madhiyumkadhi rumthada vumpadi uyargindRava nangaLpo rundhiya vaLamondRupa rangiri vandharuL ...... perumALE.
|
சங்கராபரணம் / நீலாம்பரி |
கனகந் திரள்கின்ற
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThirupparankunRam |
9 |
hindhOLam |
sandhadham bandhath
sandhadham bandhath ...... thodarAlE sanchalam thunjith ...... thiriyAdhE
kandhanen dRendRut ...... RunainALum kaNdukoN danbutR ...... tRiduvEnO
thandhiyin kombaip ...... puNarvOnE sankaran pangiR ...... sivaibAlA
sendhilang kaNdik ...... kadhirvElA thenparang kundriR ...... perumALE.
|
ஹிந்தோளம் |
சந்ததம் பந்த
சந்ததம் பந்தத் ...... தொடராலே சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும் கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
|
RAJIG1 |
small |
ARUPADAI VEEDU |
ThirupparankunRam |
10 |
Anandhabhairavi |
Thadakkai Pangayam
thadakkaip pangayam kodaikkuk kondalthaN thamizhkku thanjamen ...... drulagOrai
thaviththu chendriran dhuLaththiR puNpadum thaLarcchip bambaran ...... dhanaiyUsaR
kadaththai thunbamaN chadaththai thunjidum kalaththaip panchain ...... dhriyavAzhvai
kaNaththiR chendridan thiruththi thaNdayang kazhaRkku thoNdukoN ...... daruLvAyE
padaikkap pangayan thudaikka sankaran purakkak kanjaiman ...... paNiyAga
paNiththu thambayan thaNiththu santhatham paraththai koNdidun ...... thanivElA
kudakku thenparam poruppil thangumang kulaththiR gangaithan ...... chiRiyOnE
kuRappoR kombaimun punaththiR senkaram kuviththu kumbidum ...... perumALE.
|
ஆனந்தபைரவி |
தடக்கைப் பங்கயம்
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
|
MALAG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
11 |
hindhOLam |
andhakan varundhinam
andhakan varun dhinam piRagida santhatha mumvandhukaN darivaiyark anburu gusangathan thaviramuk ...... guNamALa
andhipa galendriraN daiyumozhith indhiri yasanchalan gaLaiyaRuth ambuya padhangaLin perumaiyai ...... kavipAdi
chendhilai uNarndhuNarn dhuNarvuRak kandhanai aRindhaRin dhaRivinil chendruche rugunthadan theLithara ...... thaNiyAdha
chindhaiyu mavizhndhavizhindh uraiyozhith enseyal azhindhazhin dhazhiyameyc chinthaiva raendrunin dherisanaip ...... paduvEnO
kondhavizh charaNsaraN saraNena kumbidu purandharan padhipeRa kunjari kuyambuyam peRaarak ...... karumALa
kundridi yaamponin thiruvaraik kiNkiNi kiNinkiNin kiNinena kuNdala masaindhiLang kuzhaikaLiR ...... prabaiveesath
thananthanan thanan thanavena chenchiRu chadhangaikon jidamaNith thaNdaigaL galingalin galinena ...... thiruvAna
sankari manangkuzhain dhurugamuth thanthara varumchezhun thaLarnadai sandhathi jaganthozhum saravaNa ...... perumALE.
|
ஹிந்தோளம் |
அந்தகன் வருந்தினம்
அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்தத மும்வந்துகண் டரிவையர்க் கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள
அந்திப கலென்றிரண் டையுமொழித் திந்திரி யசஞ்சலங் களையறுத் தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக் கந்தனை யறிந்தறிந் தறிவினிற் சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத
சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித் தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடி யஅம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத் தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
12 |
kalyANi |
amudhudhadhi vidamumizhu
amudhudhathi vidamumizhu sengat tingat pagavinoLir veLiReyiRu thunjaR kunjith thalaiyumudai yavanarava thaNdac chaNdac ...... camanOlai
adhuvarugu maLaviluyi rangit tingup paRaithimilai thimirthamigu thambattam paR karaiyavuRa vinaralaRa undhi chandhith ...... theruvUdE
emadhuporuL enumaruLai indrik kundrip piLavaLavu thinaiyaLavu pangit tuNkaik kiLaiyumudhu vasaithavira indRaik kandRaik ...... kenanAdA
dhidugakadi dhenumuNarvu pondrik koNdit dududududu dududududu duNdut duNdut tenavagalu neRikarudhi nenjath thanjip ...... pagirAdhO
kumudhapathi vagiramudhu chindhac chindhac charaNapari purasurudhi konjak konja kudilasadai bavurikodu thongap pangiR ...... kodiyAdak
kulathadini asaiya isai pongap pongak kazhaladhira degudeguda dengat dengath thogukugugu thogukugugu thongath thongath ...... thogutheedhO
dhimidhamena muzhavolimu zhangac chengaith thamarugama thadhirsadhiyo danbark kinbath thiRamudhavu barathaguru vandhikkumsaR ...... gurunAthA
thiraLumani tharaLamuyar thengit rangip puraLaeRi thiraimakara sangath thungath thimirachala nidhithazhuvu chendhiR kandhap ...... perumaLE.
|
கல்யாணி |
அமுதுததி விடமுமிழு
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட் டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் புரளஎறி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
13 |
punnAgavarALi |
aruNamaNi mEvu
aruNamaNi mEvu bUshitha mrugamadha pateera lEpana abinava visAla pUraNa ampoR kumbath ...... thanamOdhi
aLikulavu mAdhar leelaiyin muzhugiyabi shEka meedhena aRavumuRa vAdi neediya angai kongaik ...... kidhamAgi
iruNiRaiya mOdhi mAligai saruviuRa vAna vELaiyil izhaikalaiya mAdha rArvazhi inbut Ranbut ...... RazhiyAneeL
iravupagal mOha nAgiye padiyilmadi yAmal yAnumun iNaiyadigaL pAdi vAzhaen nenjil senchol ...... tharuvAyE
tharuNamaNi Ada rAvaNi kudilasadil Adhi Odhiya chathurmaRaiyin Adhi Agiya sangath thungak ...... kuzhaiyALar
tharumuruga mEga sAyalar thamaramaga rAzhi sUzhbuvi thanai muzhudhum vAri Eyamu thundit taNdark ...... karuLkUrum
serumudhali mEvu mAvali adhimadhaka pOla mAmalai theLivinudan mUla mEyena mundhac chindhith ...... tharuLmAyan
thirumaruga sUran mArbodu silaiyuruva vElai Eviya jeyasarava NAma nOhara sendhil kandhap ...... perumALE.
|
புன்னாகவராளி |
அருணமணி மேவு
அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் ...... தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் ...... றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் ...... குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
14 |
khamAs |
avaNipe RunthOt
avanipe RunthOt tampoR kuzhaiyada rambAR puNpat Rarivaiyar thampAR kongaik ...... kidaiyEsendRu
aNaitharu paNdAt tangkat Rurugiya koNdAt tampet Razhitharu thiNdAt tamsat ...... RozhiyAdhE
bavamaRa nenjAR chindhith thilaguka dambAr thaNdai padhayuga LampOt Rumkot ...... RamunALum
padhaRiya angAp pumbath thiyumaRi vumpOyc changaip paduthuyar kaNpArth thanbut ...... RaruLAyO
thavaneRi kundrA paNbit RuRavina runthOt Ranjath thanimalar anjAr pungath ...... thamarAdi
thamizhini thenkAR kandRit Riritharu kanjAk kandRaith thazhalezha vendRArk kandRaR ...... pudhamAkac
sivavadi vamkAt tumsaR gurupara thenpAR changath thiraLmaNi sindhAc chindhuk ...... karaimOdhum
dhinakara thiNdEr sandap pariyida RunkOt tinjith thiruvaLar sendhUrk kandhap ...... perumALE.
|
கமாஸ் |
அவனி பெறுந்தோடு
அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி
தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
15 |
khAmbOdhi |
aRivazhiya mayalperuga
aRivazhiya mayalperuga uraiyumaRa vizhisuzhala analaviya malamozhuga ...... agalAdhE
anaiyumanai arugiluRa veruviyazha uRavumazha azhalinigar maRaliyenai ...... azhaiyAdhE
seRiyumiru vinaikaraNa maruvupulan ozhiyavuyar thiruvadiyil aNugavaram ...... aruLvAyE
sivanainigar podhiyavarai munivanaga magizhairu sevikuLira iniyathamizh ...... pagarvOnE
neRithavaRi alarimadhi naduvanmaga pathimuLari nirudhinidhi pathikariya ...... vanamAli
nilavumaRai avanivargaL alaiyaara surimaipuri nirudhanuram aRaayilai ...... viduvOnE
maRiparasu karamilagu paramanumai iruvizhiyu magizhamadi misaivaLarum ...... iLaiyOnE
madhalaithavazh udhadhiyidai varutharaLa maNipuLina maRaiyavuyar karaiyiluRai ...... perumALE.
|
காம்போதி |
அறிவழிய மயல்பெருக
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை ...... யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர ...... மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
|
MALAG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
16 |
mOhanam |
anaivaru maruNda
anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba amara a dipintho darnthu ...... piNanARum
azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambu mavalavu dalanju manthu ...... thadumARi
manaithoRu mithampa karnthu varavara viruntha runthi manavazhi thirinthu mangum ...... vasaitheera
maRaicathur vithanthe rinthu vakaiciRu cathangai konju malaradi vaNanga enRu ...... peRuvEnO
thinaimisai cukanka dintha punamayi liLanku rumbai thikazhiru thanampu Narntha ...... thirumArbA
jegamuzhu thumunpu thumpi mukavano duthanthai munpu thikiriva lamvantha cempon ...... mayilveerA
iniyaka nimanthi cinthu malaikizha vacenthil vantha iRaivagu kakantha enRu ...... mizhaiyOnE
ezhukada lumeNci lambum nicicararu manja anju mimaiyava raiyanja lenRa ...... perumALE.
|
மோஹனம் |
அனைவரு மருண்ட
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா
ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா
இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே
எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
17 |
husEni |
iyalisaiyi luchitha
iyalisaiyil uchitha vanjik ...... kayarvAgi iravupagal manadhu chindhiththu ...... uzhalAdhE
uyarkaruNai puriyum inbak ...... kadalmUzhgi unaiyenadhuL aRiyum anbaith ...... tharuvAyE
mayilthagarga lidaiya randhath ...... thinaikAval vanajakuRa magaLai vandhiththu ...... aNaivOnE
kayilaimalai anaiya sendhil ...... padhivAzhvE karimugavan iLaiya kandha ...... perumALE.
|
ஹுஸேனி |
இயலிசையி லுசித
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
|
RAJIG3 |
small |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
18 |
sudhdha dhanyAsi |
irukkung kArana(urukkam pEsiya)
urukkam pEsiya neeliyar kAsukaL paRikkun thOshikaL mOkavi kArikaL uruttum pArvaiyar mApazhi kArikaL ...... mathiyAthE
uraikkum veerikaL kOLara vAmena vudatRun thAthiyar kAsaLa vEmanam uRaikkun thUrikaL meethini lAsaikaL ...... purivEnO
arukkan pOloLi veesiya mAmudi yanaiththun thAnazha kAynala mEthara arutkaN pArvaiyi nAladi yArthamai ...... makizhvOdE
azhaiththum sEthikaL pEsiya kAraNa vadippan thAnena vEyenai nAdoRum athikkanj sErthara vEyaru LAluda ...... ninithALvAy
irukkum kAraNa meeRiya vEthamum isaikkum sAramu mEthozhu thEvarkaL idukkaN theerkana nEyadi yArthava ...... mudanmEvi
ilakkan thAnena vEthozha vEmakizh viruppam kUrtharu mAthiyu mAyula kiRukkun thAthaki cUdiya vENiya ...... naruLbAlA
thirukkun thApathar vEthiya rAthiyar thuthikkun thALudai nAyaka nAkiya sekacchem cOthiyu mAkiya mAdhavan ...... marukOnE
sezhikkum sAliyu mEkama LAviya karuppam sOlaiyum vAzhaiyu mEthikazh thiruchchen thUrthanil mEviya thEvarkaL ...... perumALE.
|
சுத்த தன்யாசி |
இருக்குங் காரண(உருக்கம் பேசிய)
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே
உரைக்கும் வீரிகள் கோளர வாமென வுடற்றுந் தாதியர் காசள வேமனம் உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ
அருக்கன் போலொளி வீசிய மாமுடி யனைத்துந் தானழ காய்நல மேதர அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண வடிப்பந் தானென வேயெனை நாடொறும் அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்
இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி
இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா
திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
19 |
kIravAni |
udhathiyaRal moNdu
uthathiyaRal moNdu cUlkoLkaru mukilenai ruNda neelamika voLithikazhu manRal Othinarai ...... panjupOlAy
uthiramezhu thunga vElavizhi midaikadaiyo thungu peeLaikaLu mudaithayirpi thirntha thOithena ...... vempulAlAy
mathakarada thanthi vAyinidai sorukupiRai thantha cUthukaLin vadivutharu kumpa mOthivaLar ...... kongaithOlAy
vanamazhiyu mangai mAtharkaLin nilaithanaiyu Narnthu thALiluRu vazhiyadimai yanpu kUrumathu ...... sinthiyEnO
ithazhpothiya vizhntha thAmaraiyin maNavaRaipu kuntha nAnmukanum eRithiraiya lampu pAluthathi ...... nanjarAmEl
iruvizhithu yinRa nAraNanum umaimaruvu canthra sEkaranum imaiyavarva Nangu vAsavanum ...... ninRuthAzhum
muthalvasuka maintha peedikaiyil akilasaka aNda nAyakithan makizhmulaisu rantha pAlamutha ...... muNdavELE
muLaimuruku sangu veesiyalai mudukimaitha vazhntha vAyperuki muthalivaru senthil vAzhvutharu ...... thambirAnE.
|
கீரவாணி |
உததியறல் மொண்டு
உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறைபு குந்த நான்முகனும் எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும் உமைமருவு சந்த்ர சேகரனும் இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில் அகிலசக அண்ட நாயகிதன் மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
20 |
valaji / panthuvarALi |
eVinai nErvizhi
Evinai nErvizhi mAtharai mEviya Ethanai mUdanai neRi pENA
eenanai veeNanai Edezhu thAmuzhu Ezhaiyai mOzhaiyai akalA neeL
mAvinai mUdiya nOypiNi yALanai vAymai yilAthanai ikazAthE
mAmaNi nUpura sEthaLa thALthani vAzvuRa eevathum orunALE
nAvalar pAdiya nUlisaiyAl varu nArathanAr pukal kuRamAthai
nAdiye kAnidai kUdiya sEvaka nAyaka mAmayil udaiyOnE
thEvi manOmaNi Ayipa rAparai thEnmozhi yALtharu siRiyOnE
sENuyar sOlaiyi neezhali lEthikaz seeralai vAy varu perumALE.
|
வலஜி / பந்துவராளி |
ஏவினை நேர்விழி
ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே.
|
RAJIG3 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
21 |
bilahari |
OrA thondRaip pArA
OrA thonRaip parA thanthath thOdE vanthit ...... tuyirchOra
UdA nanRaR RArpOl ninRet tAmAl thanthit ...... tuzhalmAthar
kUrA vanpiR chOrA ninRak kOyA ninRut ...... kulaiyAthE
kOdAr chempot RoLA ninchoR kOdA thenkaik ...... karuLthArAy
thOrA venRip pOrA manRat ROLA kunRaith ...... thoLaiyAdee
chUthA yendik kEyA vanchach chUrmA anchap ...... porumvElA
CheerAr konRaith thArmAr ponRach chEvE Renthaik ...... kiniyOnE
thEnE yanpark kEyA minchoR chEyE chenthiR ...... perumALE.
|
பிலஹரி |
ஓரா தொன்றைப் பாரா
ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் ...... டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் ...... டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் ...... குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் ...... கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் ...... தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச் சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச் சேவே றெந்தைக் ...... கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற் சேயே செந்திற் ...... பெருமாளே.
|
MANIG2 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
22 |
manOlayam |
kattazhagu vittu
kattazhaku vittuth thaLarnthang kirunthumunam ittapoRi thappip piNangkoN dathinsilarkaL kattaName duththuc cumanthum perumpaRaikaL ...... muRaiyOdE
vettavida vettak kidanjang kidanjamena makkaLoru mikkath thodarnthum puraNdumvazhi vittuvaru miththaith thavirnthun pathangaLuRa ...... vuNarvEnO
patturuvi nettaik kravunjam piLanthukadal mutRumalai vatRik kuzhampung kuzhampamunai patta ayil thottuth thidangkoN dethirnthavuNar ...... mudisAyath
thattazhiya vettik kavantham perungkazhuku nirththamida raththak kuLangkaN dumizhnthumaNi saRcamaya viththaip palankaN dusenthiluRai ...... perumALE.
|
மனோலயம் |
கட்டழகு விட்டு
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.
|
|
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
23 |
kAvadichindhu |
kaNdumozhi kombu
kaNdumozhi kombu kongai vanjiyidai yambu nanju kaNkaLkuzhal koNdal enRu ...... palakAlum
kaNduLamva runthi nonthu mangaiyrva sampu rinthu kangulpakal enRu ninRu ...... vithiyAlE
paNdaivinai koNdu zhanRu venthuvizhu kinRal kaNdu pangayapa thangkaL thanthu ...... pukazhOthum
paNpudaiya sinthai yanpar thangaLinu danka lanthu paNpupeRa anja lanja ...... lenavArAy
vaNdupadu kinRa thongal koNdaRane rungi yiNdu vampinaiya dainthu canthin ...... mikamUzhki
vanjiyaimu nintha kongai menkuRama danthai sengai vanthazhaku danka lantha ...... maNimArbA
thiNdiRalpu naintha aNdar thangaLapa yangaL kaNdu senjamarpu nainthu thunga ...... mayilmeethE
senRasurar anja venRu kunRidaima Nampu Narnthu senthilnakar vantha marntha ...... perumALE.
|
காவடிச்சிந்து |
கண்டுமொழி கொம்பு
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
24 |
Anandhabhairavi |
kamala mAdhudan
kamala mAthudan inthirai yunjari solavo NAthama danthaiyar santhana kaLapa seethaLa kongaiyil angaiyil ...... irupOthEy
kaLavu nUltheri vanjanai anjana vizhiyin mOkitha kanthasu kantharu kariya Othiyil inthumu kanthanil ...... maruLAthE
amala mAkiya sinthaiya dainthakal tholaivi lAtha aRamporuL inpamum adaiya Othiyu Narnthutha Nanthapin ...... aruLthAnE
aRiyu mARupe Rumpadi anpinin iniya nAthasi lampupu lampidum aruNa Adaka kiNkiNi thangiya ...... adithArAy
kumari kALipa yangari sangari kavuri neelipa ramparai ampikai kudilai yOkini saNdini kuNdali ...... emathAyi
kuRaivi lALu mai manthari anthari vekuvi thAkama sunthari thantharuL kumara mUshika munthiya aingara ...... kaNarAyan
mamavi nAyagan nanjumizh kanjuki aNika jAnana vimpanor ampuli mavuli yAnuRu sinthaiyu kantharuL ...... iLaiyOnE
vaLarum vAzhaiyu manjaLum injiyum idaivi dAthune rungiya mangala makimai mAnakar senthilil vanthuRai ...... perumALE.
|
ஆனந்தபைரவி |
கமல மாதுடன்
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே
அறியு மாறுபெ றும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி கவுரி நீலிப ரம்பரை அம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி அணிக ஜானன விம்பனொர் அம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
25 |
sahAnA / thilang |
kAlanAr vengkodun
kAlanAr venkodun dUthar pAsankoden kAlinAr thandhudan ...... kodupOga
kAdhalAr maindharum thAyarArunj sudum kAnamE pinthodarndh ...... alaRAmun
sUlam vAL thaNdu senjsEval kOdhandamum sUdu thOLun thadan ...... thirumArbum
thUya thAL thaNdaiyung kANa Arvanj seyun thOgai mEl kondu mun ...... varavENum
AlakAlam paran pAlathA ganjidun dhEvarvA zhandrugandh ...... amudheeyum
AravAranj seyum vElaimEl kaN vaLarndh Adhi mAyandranan ...... marugOnE
sAli sEr sanginam vAvi sUzh pangaiyam sAralAr sendhilam ...... padhivAzhvE
ThAvusUran sAyaVe gampeRun thArai vEl undhidum ...... perumALE.
|
சஹானா / திலங் |
காலனார் வெங்கொடுந்
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் ...... கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந் தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந் தாதிமா யன்றனன் ...... மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
26 |
kundhaLavarALi |
kudarniNa menbu
kudarniNa menpu salamala maNdu kuruthina rampu ...... seeyUn pothithOl
kulavu kurampai murudu sumanthu kunakima kizhnthu ...... nAyEn thaLarA
adarmatha nampai yanaiyaka rungka Narivaiyar thangaL ...... thOdOyn thayarA
aRivazhi kinRa kuNamaRa vunRan adiyiNai thanthu ...... neeyAN daruLvAy
thadaviyal senthil iRaiyava naNpu tharukuRa mangai ...... vAzhvAm puyanE
saravaNa kantha murugaka damba thanimayil koNdu ...... pArchUzhn thavanE
sudarpadar kunRu thoLaipada aNdar thozhavoru sengai ...... vElvAng kiyavA
thurithapa thanga irathapra saNda sorikadal ninRa ...... chUrAn thakanE.
|
குந்தலவராளி |
குடர்நிண மென்பு
குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர் தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.
|
|
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
27 |
karaharapriyA |
kombanai yArkhAdhu
kombanaiyAr kAdhu mOdhiru kaNgaLil AmOdha seethaLa kungkuma pAdeera bUshaNa ...... nagamEvu
kongaiyil neerAvi mEl vaLar sengazhu neer mAlai sUdiya kondaiyil AdhAra sObaiyil ...... maruLAdhE
umbargaL swAmina mOnama emperu mAnEna mOnama oNdodi mOgAna mOnama ...... enanALum
unpuga zhEpAdi nAnini anbudan AchAra pUjaisey dhuyndhida veeNALpa dAtharuL ...... purivAyE
pambara mEpOla Adiya sankari vEdhALa nAyaki pangaya seepAdha nUpuri ...... karasUli
pangami lAneeli mOdiba yankari mAkALi yOgini paNdusu rApAna sUrano ...... dedhirpOrkaN
dempudhal vAvAzhi vAzhiye numpadi veeRAna vElthara endrumu LAnEma nOhara ...... vayalUrA
insolvi sAkAkri pAkara sendhilil vAzhvAgi yEadi endranai yeedERa vAzhvaruL ...... perumALE.
|
கரஹரப்ரியா |
கொம்பனை யார்காது
கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
|
RAJIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
28 |
surutti |
chEma kOmaLa
sEma kOmaLa pAdhath thAmarai sErdhaRk Odhum ...... anantha vEdhA
sEmak kOmaLa pAdhath thAmarai sErdhaRk Odhuma ...... nanthavEdhA
theedhath thEavi rOdhath thEguNa seelath thEmiga ...... anbuRAdhE
kAmak rOdhavu lObap bUthavi kArath thEazhi ...... kindramAyA
kAyath thEpasu pAsath thEsilar kAmutrE yuma ...... dhenkolOthAn
nEmich cUrodu mEruth thULezha neeLak kALabu ...... yangakAla
neelak reebaka lAbath thErvidu neebach chEvaga ...... sendhilvAzhvE
Omath theevazhu vArkat kUrsiva lOkath thEtharu ...... mangaibAlA
yOgath thARupa dhEsath dhEsiga Umaith dhEvargaL ...... thambirAnE.
|
சுருட்டி |
சேமக் கோமள
சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும ...... நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக ...... அன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி ...... கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும ...... தென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு ...... யங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு ...... மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
29 |
bhImpLAs |
thaNdE nuNdE vaNdAr
thaNdE nuNdE vaNdAr vanjEr thaNdAr manjuk ...... kuzhalmAnAr
thmpAl anbAr nenjE koNdE sambA vanchot ...... RadinAyEn
maNdO yanthee menkAl viNdOy vaNkA yampoyk ...... kudilvERAy
vankA nampOy aNdA munbE vandhE ninpoR ...... kazhalthArAy
koNdA dumpEr koNdA dumsUr kondrAy vendrik ...... kumarEsA
kongAr vaNdAr paNpA dumseer kundRA mandRaR ...... giriyOnE
kaNdA gumpA luNdA aNdAr kaNdA kandhap ...... buyavELE
kandhA maindha ranthOL maindhA kandhA sendhiR ...... perumALE.
|
பீம்ப்ளாஸ் |
தண்டேனுண்டே வண்டார்
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் ...... கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் கொன்றாய் வென்றிக் ...... குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் குன்றா மன்றற் ...... கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார் கண்டா கந்தப் ...... புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா கந்தா செந்திற் ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
30 |
simmEndhira madhyamam / dhanyA |
thandayaNi veNdaiyung
thaNdaiaNi veNdaiyang kiNkiNisa dhangaiyun thaNkazhalsi lambudan ...... konjavEnin
thandhaiyinai munparindhu inbavuri koNdunan santhodama Naindhunin ...... RanbupOlak
kanduRaka dambudan sandhamaku dangaLum kanjamalar sengaiyum ...... sindhuvElum
kaNgaLumu gangaLum chandhiRani RangaLum kaNkuLira endranmun ...... sandhiyAvO
puNdarikar aNdamum koNdabagi raNdamum pongiezha vengaLang ...... koNdapOdhu
pongiriye namchiRandhu enginumva Larndhumun puNdarikar thandhaiyum ...... sindhaikUrak
koNdanada nampadham sendhililum endranmun konjinada namkoLum ...... kandhavELE
kongaikuRa mangaiyin sandhamaNam uNdidum kumbamuni kumbidun ...... thambirAnE.
|
ஸிம்மேந்திர மத்யமம் / தன்யாசி |
தண்டையணி வெண்டையங்
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
|
RAJIG2 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
31 |
Arabhi |
thandha pasithanaiya
thandha pasidhanaia Rindhu mulaiamudhu thandhu mudhuguthada ...... viyathAyAr
thambi paNividaisey thoNdar piriyamuLa thangai marugaruyir ...... enavEsAr
maindhar manaiviyarka dumbu kadanudhavum andha varisaimozhi ...... pagarkEdA
vandhu thalainavira vizhndhu tharaipugama yanga orumagida ...... misaiyERi
antha kanumenaia darndhu varugaiyinil anja lenavaliya ...... mayilmElnee
antha maRaliyodu gandha manidhanama dhanba nenamozhiya ...... varuvAyE
chindhai magizhamalai mangai nagiliNaigaL sindhu payamayilum ...... ayilveerA
thingaL aravunadhi thundRu sadilararuL sendhi nagariluRai ...... perumALE.
|
ஆரபி |
தந்த பசிதனைய
தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
32 |
AbhOgi |
tharikkungkalai negizhkkumbara
tharikkungkalai negizhkkumpara thavikkungkodi ...... madhanEvit
Ragaikkunthani thigaikkunjchiRu thamizhththendralin ...... udanEnin
RerikkumpiRai yenappuNpadu menappunkavi ...... silapAdi
irukkumchilar thiruchchendhilai uraiththuyndhida ...... aRiyArE
arikkunjchathur maRaikkumpira manukkuntheri ...... varidhAna
adicchenjadai mudikkoNdidu maraRkumpuri ...... thavabAra
girikkumbanan munikkumkrupai varikkunguru ...... paravAzhvE
kiLaikkunthiRal arakkankiLai kedakkandRiya ...... perumALE.
|
ஆபோகி |
தரிக்கும் கலை
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
33 |
bhairavi |
thunbangkoN danga
thunbankoN dangame linthaRa nondhanbum paNbuma RandhoLi thunjumpeN sanchala menpathi ...... laNukAthE
inbanthan thumbartho zhumpatha kanchanthan thanjame numpadi yenRenRum thoNduce yumpadi ...... aruLvAyE
ninpankon RunkuRa mincara NankaNdun thanjame numpadi ninRanpin Ranpadi kumpidu ...... miLaiyOnE
paimponcin thinRuRai thangiya kunRengun cankuva lampuri pampunthen centhilil vantharuL ...... perumALE.
|
பைரவி |
துன்பம் கொண்டு
துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே
இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்குவ லம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
34 |
thOdi / atAnA |
thondhi sariya
thondhi sariya mayirE veLiRanirai dhantham asaiya mudhugE vaLaiyaidhazh thonga orukai thadimEl varamagaLir ...... nagaiyAdi
thoNdu kizhavan ivanAr enairumal giNgiN enamun uraiyE kuzharavizhi thunju kurudu padavE sevidupadu ...... seviyAgi
vandha piNiyum adhilE midaiyumoru pandi thanume yuRuvE dhanaiyumiLa maindhar udaimai kadanE dhenamuduga ...... thuyarmEvi
mangai azhudhu vizhavE yamapadargaL nindru saruva malamE ozhugauyir mangu pozhudhu kadidhE mayilinmisai ...... varavENum
endhai varuga ragunA yakavaruga maindha varuga maganE inivaruga enkaN varuga enadhA ruyirvaruga ...... abirAma
ingu varuga arasE varugamulai uNga varuga malarsU didavaruga endru parivi nodukO salaipugala ...... varumAyan
chindhai magizhu marugA kuRavariLa vanji maruvum azhagA amararsiRai sindha asurar kiLaivE rodumadiya ...... adudheerA
thingaL aravu nadhisU diyaparamar thandha kumara alaiyE karaiporudha sendhi nagaril inidhE maruvivaLar ...... perumALE.
|
தோடி / அடாணா |
தொந்தி சரிய
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
35 |
jOnpuri |
thOlodu mUdiya
thOlodu mUdiya kUraiyai nambip pAvaiyar thOdhaka leelaini rambic chUzhporuL thEdida Odiva rundhip ...... pudhidhAna
thUdhodu nAnmaNi mAlaipra bandhak kOvaiyu lAmadal kURiya zhundhith thOmuRu kALaiyar vAsaltho Rumpuk ...... kalamArum
kAlanai veeNanai needhike dumpoyk kOLanai mAnami lAvazhi nenjak kAdhaka lObavru dhAvanai nindhaip ...... pulaiyEnai
kAraNa kAriya lOkapra panjac sOkame lAmaRa vAzhvuRa nambiR kAsaRu vArimey nynAnatha vanchat ...... RaruLAdhO
pAlana meedhuma nAnmuga sempoR pAlanai mOdhapa rAdhana paNdap pAriya mAruthi thOLmisai koNdut ...... RamarAdip
pAviyi rAvaNa nArthalai sindhic cheeriya veedaNar vAzhvuRa mandRaR pAvaiyar thOLpuNar mAthular chindhaikku ...... iniyOnE
seelamu lAviya nAradhar vandhut ReedhavaL vAzhpuna mAmena mundhith thEmozhi pALitha kOmaLa inbak ...... girithOyvAy
sElodu vALaiva rAlkaLki Lambith thARukoL pUgama LAviya inbac cheeralai vAynagar mEviya kandhap ...... perumALE.
|
ஜோன்புரி |
தோலொடு மூடிய
தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்தித் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற் றீதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
36 |
kEdhAra gauLai |
nAlu maindhu vAsal
nAlu maindhu vAsal keeRu thURu dambu kAlkai yAgi nAri yenbil Agum Agam ...... adhanUdE
nAdha mondRa Adhi vAyil nAta kangaL Ana Adi nAda Rindhi dAma lEga ...... vaLarAmun
nUla nantha kOdi thEdi mAlmi gundhu pAru LOrai nURu senchol kURi mARi ...... viLaitheemai
nOyka landha vAzhvu RAmal neeka landhu LAgu nyAna nUla danga Odha vAzhvu ...... tharuvAyE
kAlan vandhu bAlan Avi kAya vendRu pAsam veesu kAlam vandhu Olam Olam ...... enumAdhi
kAman aindhu bANa mOdu vEmi nendru kANu mOnar kALa kaNda rOdu vEdha ...... mozhivOnE
Ala mondRu vElai yAgi yAnai anjal theeru mUla Azhi angai Ayan mAyan ...... marugOnE
Ara NangaL thALai nAda vAra Nangkai mEvum Adhi yAna sendhil vAzhva dhAna ...... perumALE.
|
கேதார கௌளை |
நாலுமைந்து
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
|
RAJIG3 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
37 |
dhanyAsi |
nidhikkup pingalan
nidhikkup pingalan padhathuk kindhiran niRaththil kandhanen ...... RinaivOrai
nilaththit Ranperum pasikkuth thanjamen RaratRith thunbanen ...... jinilnALum
pudhuchoR changamon dRisaiththuc chankatam pugattik kondudam ...... pazhimAyum
pulaththil sanchalang kulaiththit tunpadham puNarkkaik kanbuthan ...... dharuLvAyE
madhiththuth thiNpuram siriththuk kondRidum maRaththit Randhaiman ...... dRinilAdi
mazhukkaik koNdasan kararkkuc chendRuvaN thamizhcchol sandhamon ...... RaruLvOnE
kudhiththuk kundridan dhalaiththuc chemponum kozhiththuk koNdasen ...... dhilinvAzhvE
kuRappoR kombaimun punaththiR chenkarang kuviththuk kumbidum ...... perumALE.
|
தன்யாசி |
நிதிக்குப் பிங்கலன்
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங் கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
38 |
bAgEsrI |
nilayAp poruLai
nilaiyAp poruLai udalAk karudhi nedunAt pozhudhum ...... avamEpOy
niRaipOy sevidu kurudAyp piNigaL niRaivAy poRigaL ...... thadumARi
malaneer sayana misaiyAp perugi madivER kuriya ...... neRiyAga
maRaipOt Rariya oLiyAy paravu malarthAt kamalam ...... aruLvAyE
kolaikAt tavuNar kedamAc chaladhi kuLamAyc chuvaRa ...... mudhusUdham
kuRipOyp piLavu padamER kadhuvu kodhivER padaiyai ...... viduvOnE
alaivAy karaiyin maghizhseerk kumara azhiyAp punidha ...... vadivAgum
araNArk kadhidha poruLkAt tadhipa adiyArk keLiya ...... perumALE.
|
பாகேஶ்ரீ |
நிலையாப் பொருளை
நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது ...... மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய ...... நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல ...... மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை ...... விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித ...... வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய ...... பெருமாளே.
|
RAJIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
39 |
simmEndhira madhyamam |
panja pAthaka muRupiRai
panja pAthaka muRupiRai yeyiReri kunji kUrvida matharvizhi pilavaka pangka vANmuka mudukiya nedukiya ...... thiricUlam
pantha pAsamu maruviya karathala minji neediya karumuki luruvodu paNpi lAthoru pakadathu muthukinil ...... yamarAjan
anja vEvaru mavathara mathiloru thanja mAkiya vazhivazhi yaruLpeRum anpi nAluna thadipuka zhadimaiye ...... nethirEnee
aNda kOLakai vedipada idipada eNdi sAmuka madamada nadamidum antha mOkara mayilini liyaludan ...... varavENum
manju pOlvaLa raLakamu miLakiya ranji thAmrutha vasanamu nilavena vantha thUyaveN muRuvalu mirukuzhai ...... yaLavOdum
manRal vArija nayanamu mazhakiya kunRa vANartha madamakaL thadamulai mantha rAsala misaithuyi lazhakiya ...... maNavALA
senjol mAthisai vadathisai kudathisai vinju keezhthisai sakalamu mikalseythu thingaL vENiyar palathaLi thozhuthuyar ...... makamEru
ceNdu mOthina rarasaru Lathipathi thoNda rAthiyum vazhivazhi neRipeRu senthil mAnaka rinithuRai yamararkaL ...... perumALE.
|
ஸிம்மேந்திர மத்யமம் |
பஞ்ச பாதகமுறுபிறை
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
40 |
panthuvarALi |
padarpuviyin mIthu
padarbuviyin meedhu meeRi vanjargaL viyaninurai bAnu vAyvi yandhurai pazhudhilperu seela nUlga Lumtheri ...... sangapAdal
panuval kadhai kAvya mAme NeNkalai thiruvaLuva dhEvar vAymai engiRa pazhamozhiyay Odhi yEu Narndhupal ...... sandhamAlai
madalbaraNi kOvai yArka lambaga mudhaluLadhu kOdi kOLpra bandhamum vagaivagaiyil Asu sERpe rungkavi ...... chandavAyu
madhurakavi rAja nAnen veNkudai virudhukodi thALa mELa thaNdigai varisaiyodu lAvu mAla gandhaitha ...... virndhidAdhO
adalporudhu pUsa lEvi Laindhida edhirporavo NAma lEga sankara arahara sivA mahAdhev endruni ...... andrusEviththu
avanivegu kAla mAy vaNangiyuL urugivegu pAsa kOsa samprama adhibelaka tOra mAja landharan ...... nondhuveezha
udalthadiyum Azhi thAve nambuya malargaLdhasa nURu thALi dumpagal orumalari lAdhu kOva Nindhidu ...... sengaNmAluk
kudhaviyama gEsar bAla indhiran magaLaimaNa mEvi veeRu sendhilil uriyaadi yEnai ALa vandharuL ...... thambirAnE.
|
பந்துவராளி |
படர்புவியின் மீது
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ
அடல்பொருது பூச லேவி ளைந்திட எதிர்பொரவொ ணாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவெ னம்புய மலர்கள்தச நூறு தாளி டும்பக லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன் மகளைமண மேவி வீறு செந்திலி லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
41 |
dEvaghAndhAri |
parimaLa kaLapa
parimaLa kaLabasu gandhac chandhak ...... thanamAnAr padaiyama padaiyena andhik kungat ...... kadaiyAlE
variyaLi niraimural kongu kanguk ...... kuzhalAlE marugidu maruLanai inbut Ranbut ...... RaruLvAyE
arithiru marugaka dambath thongat ...... RirumArbA alaigumu gumuvena vembak kaNdith ...... theRivElA
thiripura dhaganarum vandhik kumsaR ...... gurunAthA jeyajeya harahara sendhiR kandhap ...... perumALE.
|
தேவகாந்தாரி |
பரிமள களப
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார் படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
|
MALAG1 |
small |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
42 |
ranjani |
pukarap pungap pagarap
pugarap pungap pagarak kundRiR puyalil thangip ...... polivOnum
poruvil thanjach churudhich changap poruLaip paNbiR ...... pugalvOnum
thigirich chengat seviyil thunjath thigirich chengaith ...... thirumAlum
thiriyap pongith thiraiyath thuNdut teLidhaR kondRaith ...... tharavENum
thagarath thandhach chikarath thondRith thadanaR kanjath ...... thuRaivOnE
tharuNak kongaik kuRavik kinbath thaiaLith thanbut ...... RaruLvOnE
pagarap paimpoR chikarak kundRaip padiyiR sindhath ...... thodumvElA
pavaLath thungap purisaic chendhiR padhiyil kandhap ...... perumALE.
|
ரஞ்சனி |
புகரப் புங்க
புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் ...... திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்
தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தடநற் கஞ்சத் ...... துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் ...... றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப் படியிற் சிந்தத் ...... தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற் பதியிற் கந்தப் ...... பெருமாளே.
|
MALAG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
43 |
sankarAnandhapriyA |
pUraNa vAra khumba
pUraNa vAra kumpa seethapa deera kongai mAtharvi kAra vanja leelaiyi lEyu zhanRu pOthava mEyi zhanthu pOnathu mAna menpa ...... thaRiyAtha
pUriya nAki nenju kAvalpa dAtha panja pAthaka nAya Ranje yAthadi yOdi Ranthu pOnavar vAzhvu kaNdu mAsaiyi lEya zhunthu ...... mayaltheerak
kAraNa kAri yanga LAnathe lAmo zhinthu yAnenu mEthai viNdu pAvaka mAyi runthu kAluda lUdi yangi nAsiyin meethi raNdu ...... vizhipAyak
kAyamu nAvu nenju mOrvazhi yAka anpu kAyamvi dAma lunRa neediya thALni nainthu kANuthal kUrtha vanjey yOkika LAyvi Langa ...... aruLvAyE
AraNa sAra manthra vEthame lAmvi Langa Athirai yAnai ninRu thAzhvane nAva Nangu mAthara vAlvi Langu pUraNa njAna minju ...... muravOnE
Arkali yUde zhunthu mAvadi vAki ninRa cUranai mALa venRu vAnula kALu maNda rAnavar kUra ranthai theeramu nALma kizhntha ...... murukEsA
vAraNa mUla menRa pOthini lAzhi koNdu vAviyin mAdi dangar pAzhpada vEye Rintha mAmukil pOli ruNda mEniya nAmu kunthan ...... marukOnE
vAluka meethu vaNda lOdiya kAlil vanthu cUlniRai vAna sangu mAmaNi yeena vunthu vArithi neerpa rantha seeralai vAyu kantha ...... perumALE.
|
சங்கரானந்தப்ரியா |
பூரண வார கும்ப
பூரண வார கும்ப சீதப டீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக்
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற சூரனை மாள வென்று வானுல காளு மண்ட ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
44 |
hamsAnandhi |
mangai siruvar
mangai siRuvar thangaL kiLainyar vandhu kadhaRa ...... udaltheeyin
mandi eriya viNdu punalil vanja mozhiya ...... vizhaAvi
venkaN maRali thankai maruva vembi idaRum ...... orupAsa
vinjai viLaiyum andRun adimai vendRi adigaL ...... thozhavArAy
singa muzhuvai thangu madavi sendRu maRamin ...... udanvAzhvAy
chindhai magizha anbar pugazhu chendhil uRaiyu ...... murugOnE
engum ilagu thingaL kamalam endRu pugalu ...... mugamAthar
inbam viLaiya anbin aNaiyum endRum iLaiya ...... perumALE.
|
ஹம்ஸானந்தி |
மங்கை சிறுவர்
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற ...... வுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய ...... விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு ...... மொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் ...... தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி ...... னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு செந்தி லுறையு ...... முருகோனே
எங்கு மிலகு திங்கள் கமல மென்று புகலு ...... முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே.
|
MANIG2 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
45 |
bEgadA |
manaththin pangena
manaththinpan genaththangaim bulaththendRan guNaththanjin thriyaththamban dhanaicchindhum ...... padikAlan
malarcchenkaN kanaRpongun thiRaththinthaN deduththaNdam kizhiththindRrin guRaththangum ...... palavOrum
enakkendring unakkendRang inaththinkaN kaNakkendRen RiLaiththanbung keduththangam ...... azhivAmun
isaikkumsen thamizhkkoNdang kirakkumpun thozhilbangam kedaththunbang kazhiththinbam ...... tharuvAyE
kanaikkunthaN kadaRchankang karaththinkaN thariththengum kalakkamsin dhidakkaNthun ...... jidumAlum
gadhiththoNpan gayaththanpaN banaiththugkun dRidacchandhang kaLikkumsam buvukkumsem ...... poruLeevAy
thinaikundran thaniRthangum siRuppeNkun gumakkumban thiruchchempon buyaththendRum ...... punaivOnE
sezhikkungkuN dagazhcchankang kozhikkumsan thhanaththinpaim pozhilthaNsen dhiliRthangum ...... perumALE.
|
பேகடா |
மனத்தின் பங்கென
மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும்
எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங் கரத்தின்கண் தரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண் பனைத்துங்குன் றிடச்சந்தங் களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ் சிறுப்பெண்குங் குமக்கும்பந் திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
46 |
senjurutti |
mundhuthamizh mAlai
mundhuthamizh mAlai kOdik kOdi sandhamodu needu pAdip pAdi munjarmanai vAsal thEdith thEdi ...... uzhalAdhE
mundhaivinai yEva rAmaR pOga mangaiyargal kAdhal dhUrath thEga mundhadimaiy Enai ALath thAnu ...... munaimeedhE
dhindhidhimi thOdhi theedhith theedhi thandhathana thAna thAnath thAna chenjeNagu chEgu thALath thOdu ...... nadamAdum
chenchiRiya kAlvi sAlath thOgai thungaanu kUla pArvaith theera semponmayil meedhi lEep pOdhu ...... varuvAyE
andhaNmaRai veLvi kAvaR kAra senthamizhsol pAvin mAlaik kAra aNdaruba kAra sEvaR kAra ...... mudimElE
anjalisey vOrgaL nEyak kAra kundRuruva Evum vElaik kAra andhamvegu vAna rUpak kAra ...... ezhilAna
sindhuramin mEvu bOgak kAra vindhaikuRa mAdhu vElaik kAra sencholadi yArgaL vArak kAra ...... edhirAna
senchamarai mAyu mAyak kAra thungaraNa sUra sURaik kAra sendhinagar vAzhu mANmaik kAra ...... perumALE.
|
செஞ்சுருட்டி |
முந்துதமிழ் மாலை
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
|
MANIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
47 |
kApi |
munaiccang kOlidu (anichchang)
aniccang kArmukam veesida mAsaRu thuvatpan jAnatha tAkamvi dAmada anaththin thUviku lAviya seeRadi ...... madamAnAr
arukkan pOloLi veesiya mAmara kathappaim pUNaNi vArmulai mElmukam azhuththum pAviyai yAviyi dERida ...... neRipArA
vinaiccaN dALanai veeNaNai neeNithi thanaikkaN dANava mAnanir mUdanai vidakkan pAynukar pAzhanai yOrmozhi ...... pakarAthE
vikaRpang kURidu mOkavi kAranai aRaththin pAlozhu kAthamu thEviyai viLiththun pAthukai neethara nAnaruL ...... peRuvEnO
munaiccang kOlidu neelama kOthathi adaiththan jAthai rAvaNa neeLpala mudikkan ROrkaNai yEvumi rAkavan ...... marukOnE
muLaikkunj ceethani lAvoda rAviri thiraikkang gAnathi thAthaki kUviLa mudikkunj sEkarar pEraru LAlvaru ...... murukOnE
thinaicceng kAnaka vEduva rAnavar thikaiththan thOvena vEkaNi yAkiya thiRaRkan thAvaLi nAyaki kAmuRum ...... ezhilvElA
siRakkun thAmarai yOdaiyil mEdaiyil niRakkunj cUlvaLai pAlmaNi veesiya thiruccen thUrvaru sEvaka nEsurar ...... perumALE.
|
காபி |
முனைச்சங் கோலிடு (அனிச்சங்)
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்
அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டானவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே
விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ
முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே
தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வேகணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.
|
MANIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
48 |
mAyA mALava gauLai |
mUppuR Ruchevi
mUpput Rucchevi kEtpat Rupperu mUchchut Ruseyal ...... thadumARi
mUrkkac choRkural kAttik kakkida mUkkuk kutchaLi ...... iLaiyOdum
kOppuk kattiin Appich chetRidu kUttil pukkuyir ...... alaiyAmun
kUtRath thaththuva neekki poRkazhal kUttic chatRaruL ...... purivAyE
kAppup poRgiri kOttip patRalar kAppaik kattavar ...... gurunAthA
kAttuk kuLkuRa vAttik kuppala kAppuk kuththira ...... mozhivOnE
vAypput Raththamizh mArgath thilporuL vAykkuc chiththira ...... murugOnE
vArththaic chiRpara theerththac chutRalai vAykut poRpamar ...... perumALE.
|
மாயா மாளவ கௌளை |
மூப்புற் றுச்செவி
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி ...... யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர் காப்பைக் கட்டவர் ...... குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல காப்புக் குத்திர ...... மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர ...... முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.
|
|
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
49 |
sankarAnandhapriyA |
mULumvinai sEra
mULumvinai sEra mElkoNdi dAainthu pUthaveku vAya mAyangkaL thAnenjil mUdineRi neethi yEthunce yAvanji ...... yathipAra
mOkaninai vAna pOkansey vEnaNdar thEdaari thAya njEyanga LAyninRa mUlapara yOka mElkoNdi dAninRa ...... thuLathAki
nALumathi vEka kAlkoNdu theemaNda vAsiyana lUdu pOyonRi vAninka NAmamathi meethi lURunka lAinpa ...... amuthURal
nAdiyathan meethu pOyninRa Anantha mElaiveLi yERi neeyinRi nAninRi nAdiyinum vERu thAninRi vAzhkinRa ...... thorunALE
kALavida mUNi mAthangi vEthancol pEthainedu neeli pAthanga LAlvantha kAlanvizha mOthu sAmuNdi pArampo ...... danalvAyu
kAthimuthir vAna mEthangi vAzhvanji Adalvidai yERi pAkangku lAmangai kALinada mAdi nALanpar thAmvanthu ...... thozhumAthu
vALamuzhu thALu mOrthaNthu zhAythangu sOthimaNi mArpa mAlinpi nALinsol vAzhumumai mAtha rALmaintha nEyenthai ...... yiLaiyOnE
mAsiladi yArkaL vAzhkinRa vUrsenRu thEdiviLai yAdi yEyangnga nEninRu vAzhumayil veera nEsenthil vAzhkinRa ...... perumALE.
|
சங்கரானந்தப்ரியா |
மூளும்வினை சேர
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல்
நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
50 |
pUrvikalyANi |
vanjanggoN dundhida
vanjangkoN dundhida rAvaNa numpandhen thiNpari thErkari manjinpaN bumsari yAmena ...... vegusEnai
vandhambum pongiya dhAgae dhirndhunthan sambira dhAyamum vambunthum bumpala pEsiyu ......medhirEkai
minjendRum sandaisey pOdhuku rangunthun junkanal pOlave gundungkun Rungkara dArmara ...... madhumveesi
mindunthung gangaLi nAletha karndhangang kangara mArbodu minsandhum sindhani sAcharar ...... vagaisEra
unchaNdan thendhisai nAdivi zhundhangkunj chendRema dhUtharga Lundhundhun dhendRida vEdhasai ...... niNamULai
uNdungkaN dumsila kULigaL diNdiNden dRungkudhi pOdavu yarndhambung koNduvel mAdhavan ...... marugOnE
thanjamthan jamsiri yEnmadhi konjamkon jamdhurai yEaruL thandhendrin bantharu veedadhu ...... tharuvAyE
sangangkanj angkayal sUzhthadam engengum pongama hApuni thanthangum sendhilil vAzhvuyar ...... perumALE.
|
பூர்வி கல்யாணி |
வஞ்சங்கொண் டுந்திட
வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பொங்கம காபுநி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
|
MANIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
51 |
manOlayam |
vanjath thudanoru
vanjath thudanoru nenjiR palaninai vanjik kodiidai ...... madavArum
vandhip pudhalvarum andhik kiLainyaru maNdik kadhaRidu ...... vagaikUra
anjak kalaipadu panjip puzhuudal angik kiraiyena ...... udanmEva
aNdip bayamuRa vendRic chamanvarum andRaik kadiyiNai ...... tharavENum
kanjap piRamanai anjath thuyarseydhu kandRach chiRaiyidum ...... ayilveerA
kaNdOth thanamozhi aNdath thirumayil kaNdath thazhagiya ...... thirumArbA
senchol pulavargaL sangath thamizhtheri sendhiR padhinagar ...... uRaivOnE
sempoR kulavada kundrai kadalidai sindhap poravala ...... perumALE.
|
மனோலயம் |
வஞ்சத் துடனொரு
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு ...... வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென ...... வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை ...... தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு ...... மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய ...... திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ...... ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
52 |
sindhubhairavi |
vandhu vandhu
vandhu vandhu muntha vazhndhu vensu gantha yanga nindRu monji monji endRa zhungku ...... zhandhaiyOdu
manda lamku lunga aNdar vinda lampi Landhe zhundha sempon manda panga Lumpa ...... yindRaveedu
kondha Laindha kuntha Lantha zhaindhu kungu mantha yangu kongai vanji thanja mendRu ...... mangukAlam
kongka dambu kongu pongu paingka dambu thaNdai konju chencha dhangai thangu panga...... yangaLthArAy
sandha darndhe zhundha rumbu mandha ramche zhungka rumbu kandha rambai seNpa dhangkoL ...... sendhilvAzhvE
thaNka dangka dandhu sendru paNka dangka darndha insol thiNpu nampu gundhu kaNdi ...... RainjukOvE
antha kanka langa vandha kandha rangkalandha sindhu ramchi Randhu vandha lampu ...... rindhamArbA
ampu nampu gundha naNbar sambu nanpu randha rantha rampa lumbar kumbar nambu ...... thambirAnE.
|
சிந்துபைரவி |
வந்து வந்து
வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு மந்த ரஞ்செ ழுங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று பண்க டங்க டர்ந்த இன்சொல் திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர் சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
53 |
khAmbOdhi / sahAnA |
variyAr karungkaN
variyAr karungkaN ...... madamAdhar
magavA saithondha ...... madhuvAgi
irupO dhunaindhu ...... meliyAdhE
iruthA Linanbu ...... tharuvAyE
paripA lanamsey ...... dharuLvOnE
paramE suranthan ...... aruLbAlA
arikE savanthan ...... marugOnE
alaivAy amarndha ...... perumALE.
|
காம்போதி / சஹானா |
வரியார் கருங்கண்
வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகவா சைதொந்த ...... மதுவாகி
இருபோ துநைந்து ...... மெலியாதே
இருதா ளினன்பு ...... தருவாயே
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே சுரன்ற ...... னருள்பாலா
அரிகே சவன்றன் ...... மருகோனே
அலைவா யமர்ந்த ...... பெருமாளே.
|
RAJIG1 |
small |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
54 |
yamunA kalyANi |
vindhadhi nooRi
vindhadhin URi vandhadhu kAyam vendhadhu kOdi ...... inimElO
viNdu vidAmal un padha mEvu vinjayar pOla ...... adiyEnum
vandhu vinAsa mun kali theera vaN siva nyAna ...... vadivAgi
vanpadham ERi en kaLaiyARa vandharuL pAdha ...... malar thArAy
endhan uLEga sen chudarAgi en kaNilAdu ...... thazhal vENi
endhaiyar thEdum anbar sahAyar engaLsu wAmi ...... aruL bAlA
sundhara nyAna men kuRa mAdhu thanthiru mArbil ...... aNaivOnE
sundhara mAna sendhilil mEvu kandha surEsar ...... perumALE.
|
யமுனா கல்யாணி |
விந்ததி னூறி
விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
55 |
mANd |
viRalmAra naindhu
viRalmAran aindhu malarvALi sindha migavAnil indhu ...... veyilkAya
midhavAdai vandhu thazhalpOla ondRa vinaimAdhar thamtham ...... vasai kURa
kuRavANar kundRil uRaipEdhai koNda kodidhAna thunba ...... mayaltheera
kuLirmAlai yinkaN aNimAlai thandhu kuRaitheera vandhu ...... kuRugAyO
maRimAn ugandha iRaiyOn magizhndhu vazhipAdu thandha ...... madhiyALA
malai mAvu sindha alaivElai anja vadivEl eRindha ...... athidheerA
aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr idainjal ...... kaLaivOnE
azhagAna sempon mayil mEl amarndhu alaivAy ugandha ...... perumALE.
|
மாண்ட் |
விறல்மார னைந்து
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
ARUPADAI VEEDU |
ThiruchendUr |
56 |
jOnpuri |
vengA LambA NanjEl
vengA LampA NanjcEl kaNpAl menpA kanjcoR ...... kuyilmAlai
menkE canthA nenRE koNdAr menRO LonRap ...... poruLthEdi
vangA LanjcO nanjcee nampOy vanpE thunbap ...... padalAmO
maindhA runthOL mainthA anthA vanthE yinthap ...... pozhuthALvAy
kongkAr painthE nuNdE vaNdAr kunRAL kongkaik ...... kiniyOnE
kunRO dunjcU zhampE zhunjcU rumpOY mangkap ...... porukOpA
kangkA LanjcEr moympA ranpAr kanRE vumpark ...... korunAthA
kampUr cinthAr thenpAl vanthAy kanthA centhiR ...... perumALE.
|
ஜோன்புரி |
வெங்கா ளம்பா ணஞ்சேல்
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே.
|
RAJIG2 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
57 |
chakravAham |
apakhAra nindhai
abagAra nindhaipat ...... tuzhalAdhE aRiyAdha vanjaraik ...... kuRiyAdhE
ubadhEsa manthirap ...... poruLAlE unainAni naindharuL ...... peRuvEnO
ibamAmu kanthanak ...... kiLaiyOnE imavAnma danthaiuth ...... thamibAlA
jebamAlai thandhasaR ...... gurunAthA thiruvAvi nankudip ...... perumALE.
|
சக்ரவாஹம் |
அபகார நிந்தை
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
|
RAJIG3 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
58 |
bilahari |
aruththi vAzhvodu
aruththi vAzhvodu thanagiya manaiviyum ...... uRavOrum aduththa pErgaLum idhamuRu magavodu ...... vaLanAdum
thariththa Urume yenamana ninaivadhu ...... ninaiyAdhun dhanaip parAviyum vazhipadu thozhiladhu ...... tharuvAyE
eruththil ERiya iRaiyavar sevipuga ...... upadhEsam isaiththa nAvina idhaNuRu kuRamagaL ...... irupAdham
pariththa sEkara magapathi tharavaru ...... dheyvayAnai padhikkoL ARiru buyapazha niyiluRai ...... perumALE.
|
பிலஹரி |
அருத்தி வாழ்வொடு
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம் இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.
|
MANIG2 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
59 |
bowLi |
avanithani lEpi Randhu
avanithani lEpi Randhu madhalaiena vEtha vazhndhu azhagupeRa vEna dandhu ...... iLainyOnAy
arumazhalai yEmi gundhu kudhalaimozhi yEpu gandru athividhama dhAyva Larndhu ...... padhinARAy
sivakalaigaL Aga mangaL migavumaRai Odhum anbar thiruvadiga LEni naindhu ...... thudhiyAmal
therivaiyarkaL Asai minji vegukavalai yAyu zhandru thiriyumadi yEnai undRan ...... adisErAy
mavunaupa dhEsa sambu madhiyaRugu vENi thumbai maNimudiyin meedha Nindha ...... magadhEvar
manamagizha vEya Naindhu orupuRama dhAga vandha malaimagaLku mAra thunga ...... vadivElA
bavanivara vEyu gandhu mayilinmisai yEthi gazhndhu padiyadhira vEna dandha ...... kazhalveerA
paramapadha mEse Rindha muruganena vEyu gandhu pazhanimalai mEla marndha ...... perumALE.
|
பௌளி |
அவனிதனி லேபி றந்து
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
|
MANIG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
60 |
mOhanam / nAttakurinji |
Arumugam Arumugam
ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ...... enRupUthi
AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum
ERumayil vAkana kukA saravaNA enathu eesaena mAnamuna ...... thenRu mOthum
EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO
neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi neelamayil vAka umai ...... thanthavELE
neesar kada mOdenathu theevinaiyelA madiya needu thani vEl vidu ...... madangkal vElA
seeRivaru mARavuNan AviyuNum Anaimuka thEvar thuNaivA sikari ...... aNdakUdanj
sErum azhakAr pazhani vAz kumaranE pirama thEvar varathA muruka ...... thambirAnE.
|
மோஹனம் / நாட்டக்குறிஞ்சி |
ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
|
RAJIG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
61 |
saurAshtram |
ulagapasu pAsa
ulagapasu pAsa thondham ...... adhuvAna uRavukiLai thAyar thandhai ...... manaibAlar
malajalasu vAsa sancha ...... lamadhAlen madhinilaike dAma lundhan ...... aruLthArAy
jalamarugu pULai thumbai ...... aNisEyE saravanaba vAmu kundhan ...... marugOnE
palakalaisi vAga mangaL ...... payilvOnE pazhanimalai vAzha vandha ...... perumALE.
|
சௌராஷ்டிரம் |
உலக பசுபாச
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
|
RAJIG2 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
62 |
bEgadA |
orupozhudhu mirucharaNa
orupozhudhum irucharaNa nEsath thEvaith ...... thuNarEnE unadhupazha nimalaiyenum Uraic chEvith ...... thaRiyEnE
perubuviyil uyarvariya vAzhvaith theerak ...... kuRiyEnE piRaviyaRa ninaiguvanen Asaip pAdaith ...... thavirEnO
dhurithamidu nirudharpura sURaik kArap ...... perumALE thozhudhuvazhi padumadiyar kAvaR kArap ...... perumALE
virudhukavi vidharaNavi nOdhak kArap ...... perumALE viRanmaRavar siRumithiru vELaik kArap ...... perumALE.
|
பேகடா |
ஒருபொழுது மிருசரண
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
|
RAJIG2 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
63 |
hindhOLam |
oruvarai yoruvar
oruvarai yoruvar thERi yaRikilar mathavi cArar orukuNa vazhiyu RAtha ...... poRiyALar
udalathu sathame nAdi kaLavupoy kolaika LAdi uRanama narakil veezhva ...... rathupOypin
varumoru vadiva mEvi yiruvinai kadalu LAdi maRaivari nanaiya kOla ...... mathuvAka
maruviya parama njAna sivakathi peRuka neeRu vadivuRa aruLi pAtha ...... maruLvAyE
thiripura meriya vEzha silaimatha neriya mUral thiruvizhi yaruLmeynj njAna ......gurunAthan
thirusaras vathima yEsu variyivar thalaiva rOtha thirunada maruLu nAtha ...... naruLbAlA
surarpathi yayanu mAlu muRaiyida asurarkOdi thukaLezha vidumeynj njAna ...... ayilOnE
sukakuRa makaLma NALa nenamaRai palavu mOthi thozhamuthu pazhani mEvu ...... perumALE.
|
ஹிந்தோளம் |
ஒருவரை ஒருவர்
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி மறைவரி னனைய கோல ...... மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாத ...... மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத திருநட மருளு நாத ...... னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
|
RAJIG2 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
64 |
dhanyAsi |
kadalai poriyavarai
kadalai poriyavarai palaka nikazhainugar kadina kudaudhara ...... vipareetha
karada thadamumadha naLina siRunayana kariNi mukavaradhu ...... thuNaivOnE
vadava raiyinmugadu adhira orunodiyil valamva rumarakatha ...... mayilveerA
magapa thitharusuthai kuRami nodiruvaru maruvu sarasavidha ...... maNavALA
adala surargaLkula muzhudhu madiyauyar amarar siRaiyaivida ...... ezhilmeeRum
aruNa kiraNaoLi oLirum ayilaividum araha rasaravaNa ...... bavalOlA
padala udupathiyai idhazhi aNisadila pasupa thivaranadhi ...... azhagAna
pazhani malaiaruLsey mazhalai mozhimadhalai pazhani malaiyilvaru ...... perumALE.
|
தன்யாசி |
கடலைப் பொரியவரை
கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே.
|
MALAG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
65 |
dEsh |
gathiyai vilakku
kathiyai vilakku mAtharkaL puthiya irathna pUshaNa kanatha naveRpu mElmiku ...... mayalAna
kavalai manaththa nAkilum unathu prasiththa mAkiya kanatha namoththa mEniyu ...... mukamARum
athipa lavajra vAkuvum ayilnu naivetRi vElathum aravu pidiththa thOkaiyu ...... mulakEzhum
athira varatRu kOzhiyum adiyar vazhuththi vAzhvuRum apina vapathma pAthamu ...... maRavEnE
iravi kulaththi rAsatha maruvi yethirththu veezhkadu raNamu kasuththa veeriya ...... kuNamAna
iLaiya vanukku neeNmudi arasa thupetRu vAzhvuRa ithamo daLiththa rAkavan ...... marukOnE
pathino ruruththi rAthikaL thapanam viLakku mALikai parivo duniRku meesura ...... suralOka
parima LakaRpa kAdavi ariya LisutRu pUvuthir pazhani malaikkuL mEviya ...... perumALE.
|
தேஷ் |
கதியை விலக்கு
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய கனதன மொத்த மேனியு ...... முகமாறும்
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிந வபத்ம பாதமு ...... மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு ரணமு கசுத்த வீரிய ...... குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
|
MALAG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
66 |
mOhanam |
kariya periya
kariya periya erumai kadavu kadiya kodiya ...... thirisUlan
kaRuvi iRugu kayiRo duyirgaL kazhiya mudugi ...... ezhukAlan
thiriyu nariyum eriyum urimai theriya viravi ...... aNugAdhE
seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL ...... tharavENum
pariya varaiyin arivai maruvu paramar aruLu ...... murugOnE
pazhana muzhavar kozhuvil ezhudhu pazhaiya pazhani ...... amarvOnE
ariyum ayanum veruva uruva ariya giriyai ...... eRivOnE
ayilu mayilum aRamu niRamum azhagum udaiya ...... perumALE.
|
மோஹனம் |
கரிய பெரிய
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி ...... யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு ...... முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி ...... யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய ...... பெருமாளே.
|
RAJIG3 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
67 |
sindhubhairavi |
karuppuvilil maruppagazhi
karuppuvilil maruppakazhi thoduththumathan viduththanaiya kadaikkaNodu siriththaNuku karuththinAl virakusey ...... madamAthar
kathakkaLiRu thidukkamuRa matharththumika vethirththumalai kanaththaviru thanaththinmisai kalakkumO kanamathil ...... maruLAmE
oruppaduthal viruppudaimai manaththilvara ninaiththaruLi yunaippukazhu menaippuviyil oruththanAm vakaithiru ...... aruLAlE
uruththiranum viruththipeRa anukkiraki yenakkuRuki yuraikkamaRai yaduththuporuL uNarththunA Ladimaiyu ...... mudaiyEnO
paruppathamu murupperiya arakkarkaLu miraikkumezhu padikkadalu malaikkavala paruththathO kaiyilvaru ...... murukOnE
pathiththamara kathaththinuda nirathnamaNi niraiththapala paNippaniru puyacchayila parakkavE iyaltheri ...... vayalUrA
thiruppukazhai yuraippavarkaL padippavarkaL midippakaimai seyiththaruLu misaippiriya thiruththamA thavarpukazh ...... gurunAthA
silaikkuRava rilaikkudilil pukaikkaLaka mukiRpudaisel thiruppazhani malaikkuLuRai thirukkaivE lazhakiya ...... perumALE.
|
சிந்துபைரவி |
கருப்புவில் மருப்பழகி
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் ...... மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி யுனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்துபொருள் உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு படிக்கடலு மலைக்கவல பருத்ததோ கையில்வரு ...... முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல பணிப்பனிரு புயச்சயில பரக்கவே இயல்தெரி ...... வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளு மிசைப்பிரிய திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல் திருப்பழநி மலைக்குளுறை திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
68 |
vijayanAgari |
karuvinuru vAgi
karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE
kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu kavalaiperi dhAgi nondhu ...... migavAdi
araharasi vAya vendRu dhinamumninai yAmal nindRu aRusamaya needhi ondRum ...... aRiyAmal
achanamidu vArgaL thangaL manaigaLthalai vAsal nindRu anudhinamu nANam indRi ...... azhivEnO
uragapada mElva Larndha periyaperu mALa rangar ulagaLavu mAlma gizhndha ...... marugOnE
ubayakula dheepa thunga virudhukavi rAja singa uRaipugali yUri landRu ...... varuvOnE
paravai manai meedhi landRu orupozhudhu dhUdhu sendRa paramanaru LAlva Larndha ...... kumarEsA
pagaiasurar sEnai kondRu amararsiRai meeLa vendRu pazhanimalai meedhil nindRa ...... perumALE.
|
விஜயநாகரி |
கருவின் உருவாகி
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
|
RAJIG3 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
69 |
gauLai |
kurambai malasalam
kurambai malajalam vazhuvaLu niNamodu elumbu aNisari dhasaiyiral kudalnedhi kulaindha seyirmayir kurudhiyo divaipala ...... kasumAla
kudinpu gudhumavar avarkadu kodumaiyar idumbar oru azhi iNaiyilar kasadargaL kurangar aRivilar neRiyilar mirugaNai ...... viRalAna
sarambar uRavanai naraganai thuraganai irangu kaliyanai parivuRu sadalanai savundha rikamuka saravaNa padhamodu ...... mayilERi
thazhaindha sivasudar thanaiena manadhinil azhundha uraiseya varumuga nagaiyoLi thazhaindha nayanamum irumalAr charaNamum ...... maRavEnE
irumbai vaguLamo diyaipala mugilpozhil uRaindha kuyilaLi olipara vidamayil isaindhu nadamidum iNaiyili pulinagar ...... vaLanAdA
iruNda kuvadidi podipada vegumuka derindhu makaramo disaikari kumuRuga iraindha asuraro dibapari yamapuram ...... vidumvELE
sirampon ayanodu munivargaL amarargaL arambai magaLiro darahara sivasiva seyambu venanada midupadham azhagiyar ...... gurunAthA
sezhumpa vaLaoLi nagaimuka madhinagu siRandha kuRamagaL iNaimulai pudhaipada jeyanko daNaiguha sivamalai maruviya ...... perumALE.
|
கௌளை |
குரம்பை மலசலம்
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள் அரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளிணைமுலை புதைபட செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
70 |
kEdhara Gaulai |
kuruthi malasala
kuruthi malasala mozhuku narakuda lariya puzhuvathu neLiyu mudalmatha kurupi niNasathai viLaiyu muLaisaLi ...... yudalUdE
kudika Lenapala kudikai valikodu kumara valithalai vayiRu valiyena kodumai yenapiNi kalaka midumithai ...... yadalpENi
maruvi mathananuL kariya puLakitha maNiya salapala kavadi malarpunai mathana kalaikodu kuvadu malaithanil ...... mayalAkA
manathu thuyaraRa vinaikaL sithaRida mathana piNiyodu kalaikaL sithaRida manathu pathamuRa venathu thalaipatha ...... maruLvAyE
niruthar podipada amarar pathipeRa nisitha aravaLai mudikaL sithaRida neRiya kirikada leriya vuruviya ...... kathirvElA
niRaiya malarpozhi yamarar munivarum nirupa gurupara kumara saraNena nediya mukiludal kizhiya varupari ...... mayilOnE
paruthi mathikanal vizhiya sivanida maruvu morumalai yaraiyar thirumakaL padiva mukilena ariyi niLaiyava ...... LaruLbAlA
parama kaNapathi yayalin mathakari vadivu koduvara viravu kuRamaka Lapaya menavaNai pazhani maruviya ...... perumALE.
|
கேதார கௌளை |
குருதி மலசல
குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற நிசித அரவளை முடிகள் சிதறிட நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும் நிருப குருபர குமர சரணென நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட மருவு மொருமலை யரையர் திருமகள் படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர விரவு குறமக ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
71 |
jOnpuri / sankarAbharaNam |
sivanAr manangkuLira
sivanAr manam kuLira upadhEsa manthram iru sevi meedhilum pagarsey ...... gurunAthA
sivakAma sundhari than varabAla kandha nin seyalE virumbi uLam ...... ninaiyAmal
avamAyai kondulagil virudhA alaindhuzhalum adiyEnai anjal ena ...... vAravENum
aRivAgamum peruga idarAnadhum tholaiya aruL nyAna inbam adhu ...... purivAyE
navaneethamum thirudi uralOde ondrum ari ragurAmar chindhai magizh ...... marugOnE
navalOkamum kaithozhu nijadhEva alankirutha nalamAna vinjaikaru ...... viLaikOvE
dhevayAnai ankuRamin maNavALa sambramuRu thiRalveera minju kadhir ...... vadivElA
thiruvAvi nankudiyil varuvEL savundharika jega mEl mey kaNda viRal ...... perumALE.
|
ஜோன்புரி / சங்கராபரணம் |
சிவனார் மனங்குளிர
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின் செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
72 |
valaji |
chIyudhira mengu
seeyuthira mengu mEypuzhuni rampu mAyamala piNda nOyiduku rampai theenarikaL kangu kAkamivai thinpa ...... thozhiyAthE
theethuLaku Nanga LEperuku thontha mAyaiyilva LArntha thOlthasaiye lumpu sEriduna rampu thAnivaipo thinthu ...... nilaikANA
Ayathuna mankai pOkavuyi rantha nAzhikaiyil vinja Usidumi dumpai yAkiyavu dampu pENinilai yenRu ...... madavArpAl
Asaiyaivi rumpi yEviraka singi thAnumika vanthu mEvidama yangu mAzhthuyarvi zhunthu mALumenai yanpu ...... purivAyE
mAyaivala kanja nAlvidave kuNdu pArmuzhuthu maNda kOLamuna dunga vAypiLaRi ninRu mEkanikar thankai ...... yathanAlE
vAriyuRa aNdi veeRodumu zhangu neerainukar kinRa kOpamode thirntha vAraNa iraNdu kOdodiya venRa ...... nediyOnAm
vEyinisai koNdu kOniraipu ranthu mEyalpuri sengaN mAlmaruka thunga vElakira vunja mAlvaraiyi dinthu ...... podiyAka
vElaividu kantha kAvirivi Langu kArkalisai vantha sEvakanva Nanga veerainakar vanthu vAzhpazhani yaNdar ...... perumALE.
|
வலஜி |
சீயுதிரமெங்கு
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
73 |
hamsanAdham |
chIR lasadanvinai
seeRal asadan vinaikAran muRaimayili theemai puri kabadi ...... bava nOyE
thEdu parisi gana needhi neRi muRaimai seermai siridhumili ...... evarOdum
kURu mozhiyadhu poyyAna kodumaiyuLa kOLan aRivili ...... unadi pENA
kULan eninum enai neeyun adiyorodu kUdum vagaimai aruL ...... purivAyE
mARu padum avuNar mALa amar porudhu vAgai yuLa mavuli ...... punaivOnE
mAga muga dadhira veesu siRai mayilai vAsi yena udaiya ...... murugOnE
veeRu kalisai varu sEva ganadhidhaya mEvum oru perumai ...... udaiyOnE
veerai uRai kumara dheera dhara pazhani vEla imaiyavargaL ...... perumALE.
|
ஹம்ஸநாதம் |
சீறல் அசடன்
சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி ...... பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு ...... னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் ...... புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது வாகை யுளமவுலி ...... புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை வாசி யெனவுடைய ...... முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு மொருபெருமை ...... யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் ...... பெருமாளே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
74 |
nAttakurinji |
suruthimudi mOnanjchol
surudhimudi mOnansol siRparama nyAna siva samaya vadivAy vandha adhvaithamAna para sudar oLiyadhAy nindra nishkaLa sorUpa mudhal ...... oru vAzhvE
thuriya nilaiyE kaNda muththar idhayA kamalam adhanil viLaiyA nindra aRbutha subOdha suka suya padika mA inba padhma padhamE adaiya ...... uNarAdhE
karuviluruvE thangu sukkila nidhAna vaLi poruma adhilE koNda mukguNa vibAga nilai karudha ariyA vanjaka kapata mUdi udal ...... vinaithAnE
kalagamidavE pongu kuppai mala vAzhvu nijam enauzhalu mAyan jeniththa guhaiyE uRudhi karudha suzhamAm indha mattai thanai ALa una ...... dharuLthArAy
oru niyamamE viNda shatsamaya vEdha adi mudi naduvumAy aNda muttai veLiyAgi uyir udal uNarvadhAy engum uRpanamadhAga amar ...... uLavOnE
udhadharisamAm inba puththamirtha bOga sukam udhavum amalAnandha saththikara mEvuNara urupiraNavA manthra karthavyam Aga varu ...... gurunAthA
parudhi kadhirE konju naRcharaNa nUpurama dhasaiya niRai pEraNda mokka nadamAdu gana padha keruvidhA thunga vetri mayil Erum oru ...... thiRalOnE
paNiyum adiyAr chindhai mey poruLadhAga navil saravaNa bavA ondru vaRkaramumAgi vaLar pAzhani malai mEnindra subramaNiyA amarar ...... perumALE.
|
நாட்டகுறிஞ்சி |
சுருதி முடி மோனம்
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
75 |
bilahari |
gnyAnangkoL poRigaL
gnAnangkoL poRigaL kUdi vAnindhu kadhiri lAdha nAdaNdi nama sivAya ...... varaiyERi
nAvinba rasama dhAna Anandha aruvi pAya nAdhanga Loduku lAvi ...... viLaiyAdi
Unanga LuyirgaL mOga nAnenba dhaRivi lAmal Omangi uruva mAgi ...... iruvOrum
Orandha maruvi nyAna mAvinjai mudhugi nERi lOkangaL valama dhAda ...... aruLthAray
thEnankoL idhazhi thAgi thArindhu salila vENi seerangan enadhu thAdhai ...... orumAdhu
sErpanja vadivi mOgi yOgankoL mavuna jOthi sErpangin amala nAthan ...... aruLbAla
kAnangaL varaikaL theevu OdhangaL podiya neela kAdandha mayilil Eru ...... murugOnE
kAmankai malargaL nANa vEdampeN amaLi sErvai kANengaL pazhani mEvu ...... perumALE.
|
பிலஹரி |
ஞானங்கொள் பொறிகள்
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி சீரங்க னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
|
RAJIG3 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
76 |
pUrvikalyANi |
thakara naRumalar
thakara naRumalar pothuLiya kuzhaliyar kalaka keruvitha vizhivalai padavithi thalaiyi lezhuthiyu manaivayi nuRavidu ...... vathanAlE
thanayar anaithamar manaiviyar sinekithar surapi viraviya vakaiyena ninaivuRu thavana salathiyin muzhukiye yidarpadu ...... thuyartheera
akara muthaluLa poruLinai yaruLida irukai kuviseythu Lurukida vurukiye araka renavala nidamuRa ezhiluna ...... thirupAtham
aruLa aruLudan maruLaRa iruLaRa kiraNa ayilkodu kurukaNi kodiyodu azhaku peRamara kathamayil misaivara ...... isaivAyE
sikara kudaiyini niraivara isaitheri sathuran vithuranil varupava naLaiyathu thirudi yadipadu siRiyava nediyavan ...... mathucUthan
thikiri vaLaikathai vasithanu vudaiyavan ezhili vadivinan aravupon mudimisai thimitha thimithimi yenanada midumari ...... marukOnE
pakara pukarmuka mathakari yuzhaitharu vanithai veruvamun vara aruL purikuka parama gurupara imakiri tharumayil ...... puthalvOnE
palavin muthupazham vizhaivusey thozhukiya naRavu niRaivayal kamukadar pozhilthikazh pazhani malaivaru puravala amararkaL ...... perumALE.
|
பூர்வி கல்யாணி |
தகர நறுமலர்
தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே
தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி சதுரன் விதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
77 |
hamIr kalyANi |
thamaru mamaru
thamarum amarum manaiyum iniya dhanamum arasum ...... ayalAga
thaRukaN maRali muRugu kayiRu thalaiyai vaLaiya ...... eRiyAdhE
kamala vimala maraka thamaNi kanaka maruvum ...... irupAdham
karudha aruLi enadhu thanimai kazhiya aRivu ...... tharavENum
kumara samara muruga parama kulavu pazhani ...... malaiyOnE
kodiya pagadu mudiya mudugu kuRavar siRumi ...... maNavALA
amarar idarum avuNar udalum azhiya amarsey ...... dharuLvOnE
aRamu niRamum ayilu mayilum azhagum udaiya ...... perumALE.
|
ஹமீர்கல்யாணி |
தமரும் அமரும்
தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரக தமணி கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி ...... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு மழகு முடைய ...... பெருமாளே.
|
RAJIG1 |
medium |
ARUPADAI VEEDU |
Pazhani |
78 |
senjurutti |
thalaivali marundhIdu
thalaivali maruththeedu kAmAlai sOgaijuram vizhivali vaRatcUlai kAyAsu vAsamvegu chalamigu vishappAga mAyAvi kArapiNi ...... aNugAdhE
thalamisai adhaRkAna pErOdu kURiyidhu parikari enakkAdhu kELAdhu pOlumavar sariyumva yadhukkEdhu thAreerso leerenavum ...... vidhiyAdhE
ulaivaRa viruppAga neeLkAvin vAsamalar vagaivagai eduththE tho dAmAli kAbaraNam unadhadi yinilsUda vEnAdu mAdhavargaL ...... irupAdham
uLamadhu thariththEvi nAvOdu pAdiyaruL vazhipada enakkEdha yAvOdu thALudhava uragama dheduththAdu mEkAra meedhinmisai ...... varavENum
alaikadal adaiththEma hAgOra rAvaNanai maNimudi thuNiththAvi yEyAna jAnakiyai adaludan azhaiththEkoL mAyOnai mAmanenu ...... marugOnE
aRuginai mudiththOnai AdhAram Anavanai mazhuvuzhai pidiththOnai mAkaLi nANamunam avaidhanil nadiththOnai mAthAdhai yEenavum ...... varuvOnE
palakalai padiththOdhu pAvANar nAviluRai iruchara NaviththAra vElAyu dhAuyarsey paraNmisai kuRappAvai thOlmEva mOgamuRu ...... maNavALA
padhumava yaliRpUga meedhE varAlgaL thuyil varu punal perukkARu kAvEri sUzhavaLar pazhaniva rukaRpUra kOlAha lAamarar ...... perumALE.
|
செஞ்சுருட்டி |
தலைவலி மருத்தீடு
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
|
|
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
79 |
panthuvarALi |
thidamilisaR guNamili
thidamilisaR guNamilinat RiRamiliyaR buthamAna seyalilimeyth thavamilinaR jepamilisork kamumeedhE
idamilikai kodaiyilisoR kiyalbilinat RamizhpAda irupadhamut Riruvinaiyat Riyalgadhiyaip peRavENum
kedumadhiyut Ridumasura kiLaimadiyap porumvElA kiraNakuRaip piRaiyaRugak kidhazhmalarkok kiRagOdE
padarsadaiyil punainadanap paramarthamak korubAlA palavayalil tharaLaniRaip pazhanimalaip perumALE.
|
பந்துவராளி |
திடமிலிசற் குணமிலி
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.
|
MANIG3 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
80 |
bhairavi |
thimira vudhathi
thimira udhathi yanaiya naraka jenana mathanil ...... viduvAyEl
sevidu kurudu vadivu kuRaivu siRidhu midiyum ...... aNugAdhE
amarar vadivu madhiga kulamum aRivu niRaiyum ...... varavEnin
aruLa dharuLi enaiyu manadho dadimai koLavum ...... varavENum
samara mugavel asurar thamadhu thalaigaL uruLa ...... migavEneeL
saladhi alaRa nediya padhalai thagara ayilai ...... viduvOnE
vemara vaNaiyil inidhu thuyilum vizhigaL naLinan ...... marugOnE
midaRu kariyar kumara pazhani viravum amarar ...... perumALE.
|
பைரவி |
திமிர வுததி
திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே.
|
MANIG1 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
81 |
vasanthA |
pagarthaRkari thAna
pagardhaRkari dhAna senthamizh isaiyiRchila pAdal anbodu payilappala kAvi yangaLai ...... uNarAdhE
pavaLaththinai veezhi inkani adhanaipporu vAyma dandhaiyar pasalaiththana mEpe Rumpadi ...... viragAlE
sagarakkadal sUzhum ambuvi misaiyippadi yEthi rindhuzhal sarugoththuLa mEa yarndhudal ...... meliyAmun
thagathiththimi dhAgi NangiNa enavutrezhu thOgai ampari thanilaRbutha mAga vandharuL ...... purivAyE
nugarviththaga mAgum endrumai mozhiyiRpozhi pAlai uNdidu nuvalmeyppuLa bAlan endridum ...... iLaiyOnE
nudhivaiththaka rAma laindhidu kaLirukaru LEpu rindhida nodiyiRpari vAga vandhavan ...... marugOnE
agarapporu LAdhi ondridu mudhalakkara mAna dhinporuL aranukkini dhAmo zhindhidu ...... gurunAthA
amararkkiRai yEva Nangiya pazhaniththiru Avi nankudi adhaniR udi yAyi rundharuL ...... perumALE.
|
வஸந்தா |
பகர்தற்கரி தான
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயிலப்பல காவி யங்களை ......யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள் அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
82 |
husEni |
panja pAthakan pAvi
panja pAthakan pAvimuzhu mUdanveku vanja lOpiyan chUthukolai kAranmathi paNko LAthavan pAvakada lUdunuzhai ...... pavushAsai
pangan mOthiyam pAzhnarakil veeNinvizha peNdir veedupon thEdinodi meethilmaRai panja mAmalam pAsamodu kUdiveku ...... sathikArar
anju pUthamuN dAkadiya kArarivar thangaL vANipang kAriyama lAmalaru Lanpar pAludan kUdiyaRi yAthapuka ...... zhadiyEnai
aNdar mAlayan thEdiyaRi yAthavoLi chanthra sEkaran pAvaiviLai yAdupadi kantha nAdudan kUdiviLai yAda aruL ...... purivAyE
vanja mAsuran sEnaikada lOdukuva dunga vEyinan pOlavoLir vElaividu vaNkai yAkadam pEduthodai yAdumudi ...... murukOnE
mangai mOkasing kAraragu rAmarida thangai chUliyang kALiyemai yeeNapukazh manga LAyisan thAnasiva kAmiyumai ...... yaruLbAlA
konju mAsukam pOlamozhi neelakadai peNkaL nAyagan thOkaimayil pOlirasa kongai mAlkuRam pAvaiyaval theeravara ...... aNaivOnE
koNdal chUzhumanj sOlaimalar vAvikayal kanthu pAyanin RAduthuvar pAkaiyuthir kanthi yOdakanj cErpazhani vAzhkumara ...... perumALE.
|
ஹுஸேனி |
பஞ்ச பாதகன்பாவி
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.
|
MANIG3 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
83 |
bAgEsrI |
pAri yAnakodai
pAri yAnakodaik konda lEthiru vAzhvi sAlathodaith thiNbu yAezhu pAru mERupugazhk konda nAyaka ...... abirAma
pAva lOrgaLkiLaik kendrum vAzhvaruL seela nyAlaviLak kinba jeevaga pAka sAdhanauth thunga mAnadha ...... enavOdhi
seera dhAgaeduth thondru mAkavi pAdi nAlumirak kanse yAdhurai seeRu vArkadaiyil sendru thAmayar ...... vuRaveeNE
sEya pAvagaiyai koNdu pOyaRi iyAma lEkamaril sindhu vArsilar sEya nArmanadhil sindhi yAraru ...... guRalAmO
Aru neermaimaduk kaNka rAnedu vAyi nErpadavut RandRu mUlamen Ara vAramadha thandhi thAnuya ...... aruLmAyan
Adhi nAraNa aR changa pANiyan Othu vArkaLuLath thanpan mAthavan Ana nAnmuganat Randhai seedharan ...... marugOnE
veera sEvakauth thaNda dhEvaku mAra ARirupoR chenkai nAyaka veesu thOgaimayil thunga vAhanam ...... udaiyOnE
veeRu kAviriyuL koNda sEkaran Ana sEvakanaR chindhai mEviya veerai vAzhpazhani thunga vAnavar ...... perumALE.
|
பாகேஶ்ரீ |
பாரி யானகொடை
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் சீல ஞாலவிளக் கின்ப சீவக பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி யாம லேகமரிற் சிந்து வார்சிலர் சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு வாயி னேர்படவுற் றன்று மூலமெ னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய னோது வார்களுளத் தன்பன் மாதவ னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு மார ஆறிருபொற் செங்கை நாயக வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர னான சேவகனற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
84 |
chArukEsi |
pudavik kaNithuki
pudavik kaNithuki lenavaLa ranthak kadalet taiyumaRa kudimuni yeNkat punitha sathathaLa nilaikoLsa yampuc ...... cathurvEthan
puramat teriyezha vizhikanal sinthik kadinath thodusila siRunakai koNdaR puthakarth tharakara parasiva ninthath ...... thanimUvar
idasith thamuniRai theLivuRa vumpoR ceviyut piraNava rakasiya manput RidavuR panamozhi yuraiseyku zhanthaik ...... kurunAthA
ethirut RasurarkaL padaikodu saNdaik kidamvaith thidAvar kulamuzhu thumpat tidavuk kiramodu vekuLikaL pongkak ...... kiriyAvum
podipat tuthiravum virivuRu maNdac cuvarvit tathiravu mukaduki zhinthap puRamap paraveLi kidukide nunjcath ...... thamumAkap
poruthuk kaiyiluLa ayilniNa muNkak kuruthip punalezhu kadalinu minjap puravik kanamayil nadavidum vinthaik ...... kumarEsA
padiyiR perumitha thakavuyar sempoR kiriyaith thanivalam varAra nanthap palanaik karimukan vasamaru LumpoR ...... pathanAlE
paranvet kidavuLa mikavumve kuNdak kaniyaith tharavilai yenAruL senthiR pazhanic civakiri thaniluRai kanthap ...... perumALE.
|
சாருகேசி |
புடவிக் கணிதுகி
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக் கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக் குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக் கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற் பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
85 |
panthuvarALi |
bOdha kantharu
bOdha kantharu kOvE namOnama needhi thangiya dhEvA namOnama bUtha lamthanai ALvAy namOnama ...... paNiyAvum
pUNu gindRapi rAnE namOnama vEdar thangkodi mAlA namOnama pOdha vanpugazh sAmee namOnama ...... aridhAna
vEdha mandhira rUpA namOnama nyAna paNditha nAthA namOnama veera kaNdaikoL thALA namOnama ...... azhagAna
mEni thangiya vELE namOnama vAna painthodi vAzhvE namOnama veeRu kondavi sAkA namOnama ...... aruLthArAy
pAdha gamseRi sUrA dhimALave kUrmai koNdayi lAlE porAdiye pAra aNdarkaL vAnA dusErthara ...... aruLvOnE
pAdhi chandhira nEsU dumvENiyar sUla sankara nArgee thanAyakar pAra thiNbuya mEsE rujOthiyar ...... kayilAyar
Adhi sankara nArbA gamAdhumai kOla ambigai mAthA manOmaNi Ayi sundhari thAyA nanAraNi ...... abirAmi
Aval koNduvi RAlE sirAdave kOma Lampala sUzhkO yilmeeRiya Avi nankudi vAzhvA nadhEvargaL ...... perumALE.
|
பந்துவராளி |
போத கந்தரு
போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர் சூல சங்கர னார்கீ தநாயகர் பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
|
RAJIG1 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
86 |
kEdhAra gauLai |
manakkavalai yEdhu
manakkavalai Edhum indri unakkadimai yEpu rindhu vagaikkumanu nUlvi dhangaL ...... thavaRAdhE
vagaippadima nOra dhangaL thogaippadiyi nAli langi mayakkamaRa vEdha mungkoL ...... poruLnAdi
vinaikkuriya pAdha gangaL thugaiththuvagai yAlni naindhu miguththaporuL Aga mangaL ...... muRaiyAlE
vegutchithanai yEthu randhu kaLippinuda nEna dandhu migukkumunai yEva Nanga ...... varavENum
manaththilvaru vOnE endRun adaikkalama dhAga vandhu malarppadhama dhEpa Nindha ...... munivOrgaL
vararkkumimai yOrgaL enbar thamakkumana mEyi rangi maruttivaru sUrai vendRa ...... munaivElA
thinaippunamu nEna dandhu kuRakkodiyai yEma Nandhu jegaththaimuzhu dhALa vandha ...... periyOnE
sezhiththavaLa mEsi Randha malarppozhilga LEni Raindha thiruppazhani vAzha vandha ...... perumALE.
|
கேதார கௌளை |
மனக்கவலை யேது
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
|
RAJIG1 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
87 |
behAg |
mUlangkiLa rOruru
mUlankiLa rOruru vAynadu nAlangula mEnadu vEridai mULpingalai nAdiyo dAdiya ...... muthalvErkaL
mUNumpira kAsama thAyoru cUlampeRa vOdiya vAyuvai mUlanthikazh thUNvazhi yEyaLa ...... vidavOdip
pAlankiLa rARusi kAramo dAruncuda rAdupa rApara pAthampeRa njAnasa thAsiva ...... mathinmEvip
pAdunthoni nAthamu nUpura mAdunkazha lOsaiyi lEpari vAkumpadi yEyadi yEnaiyum ...... aruLvAyE
cUlang kalai mAnmazhu vOrthudi vEthanthalai yOduma rAviri thOdunkuzhai sErpara nArtharu ...... murukOnE
cUrankara mArsilai vALaNi thOLunthalai thULpada vEavar cULunkeda vElvidu sEvaka ...... mayilveerA
kAlinkazha lOsaiyu nUpura vArveNdaiya vOsaiyu mEyuka kAlangkaLi nOsaiya thAnada ...... miduvOnE
kAnankalai mAnmaka LArthamai nANankeda vEyaNai vELpira kAsampazha nApuri mEviya ...... perumALE.
|
பெஹாக் |
மூலங்கிளர் ஓருருவாய்
மூலங்கிள ரோருரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடி வேதன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை தூள்பட வேஅவர் சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயணை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
88 |
subha panthuvarALi |
mUla mandhira
mUla mandhiram Odhal ingilai eeva dhingilai nEya mingilai mOna mingilai nyAnam ingilai ...... madavArgaL
mOgam uNdadhi dhAga muNdapa chAra muNdapa rAdha muNdidu mUkan endroru pErum uNdaruL ...... payilAdha
kOla munguNa veena thunbargaL vArmai yumpala vAgi vendhezhu gOra kumbiyi lEvi zhundhida ...... ninaivAgi
kUdu koNduzhal vEnai anbodu nyAna nenjinar pAli Nangidu kUrmai thandhini ALa vandharuL ...... purivAyE
peeli venthuya rAli vendhava sOgu vendhamaN mUgar nenjidai beethi kondida vAdhu koNdaruL ...... ezhudhEdu
pENi angedhir ARu sendRida mARa numpiNi theera vanjagar peeRu vengkazhu ERa vendRidu ...... murugOnE
Alam uNdavar jOthi ankaNar bAgam ondriya vAlai anthari Adhi anthamum Ana sankari ...... kumarEsA
Ara Nampayil nyAna pungava sEva lankodi yAna painkara Avi nankudi vAzhvu koNdaruL ...... perumALE.
|
சுபபந்துவராளி |
மூல மந்திர
மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர் பாக மொன்றிய வாலை யந்தரி ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ சேவ லங்கொடி யான பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
|
RAJIG3 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
89 |
ranjani |
vachanamiga vERRi
vachanamiga vEtri ...... maRavAdhE manadhuthuyar Atril ...... uzhlAdhE
isaipayilsha dAksha ...... ramadhAlE igaparasau bAgyam ...... aruLvAyE
pasupathisi vAkyam ...... uNarvOnE pazhanimalai veetRa ...... ruLumvElA
asurarkiLai vAtti ...... migavAzha amararsiRai meetta ...... perumALE.
|
ரஞ்சனி |
வசனமிக வேற்றி
வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
|
RAJIG1 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
90 |
rAmapriyA |
varadhA maNinI
varadhA maNi nee ...... ena Oril varugAdhedhu thAn ...... adhil vArA
dhiradhAdhigaLAl ...... navalOkam idavE kariyAm ...... idhilEdhu
saradhA maRai ...... Odhayan mAlum sakalAgama nUl ...... aRiyAdha
paradhEvathaiyAL ...... tharu sEyE pazhaNApuri vAzh ...... perumALE.
|
ராமப்ரியா |
வரதா மணிநீ
வரதா மணிநீ ...... யெனவோரில் வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா திகளால் ...... நவலோக மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும் சகலா கமநூ ...... லறியாத
பரதே வதையாள் ...... தருசேயே பழனா புரிவாழ் ...... பெருமாளே.
|
MANIG3 |
small |
ARUPADAI VEEDU |
Pazhani |
91 |
hamsAnandhi |
vAdham piththam
vAtham piththami dAvayi ReeLaikaL seetham paRcani cUlaima kOthara mAsang katperu mUlavi yAthikaL ...... kuLirkAsam
mARung kakkalo dEsila nOypiNi yOdun thaththuva kArArtho NURaRu vArunj cuRRinil vAzhsathi kArarkaL ...... vekumOkar
sUzhthun sithraka pAyaimu vAsaiko dEthunj caRRuNa rAmale mAyaisey sOram poykkudi lEsuka mAmena ...... ithinmEvith
thUsin poRcara mOduku lAyula kEzhum piRpada vOdidu mUdanai thUvanj suththadi yAradi sErani ...... naruLthArAy
theethan thiththimi theethaka thOthimi dUduN duddudu dUdudu dUdudu cEcenj cekkeNa thOthaka theekuda ...... venapEri
cEdan cokkida vElaika dAkame lAmanj cuRRida vEyasu rArkiri theevum pottezha vEyanal vElvidu ...... mayilveerA
vEthan poRcira meethuka dAvina leesan saRkuru vAyavar kAthinil mEvum paRRilar pERaru LOthiya ...... murukOnE
vEshang kattipi nEkima kAvaLi mAlin piththuRa vAkivi NOrpaNi veerang kotpazha nApuri mEviya ...... perumALE.
|
ஹம்ஸானந்தி |
வாதம் பித்தம்
வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
|
MANIG3 |
large |
ARUPADAI VEEDU |
Pazhani |
92 |
varALi |
vEyisaindezhu thOLkaL
vEyi sainthezhu thOLkaL thangiya mAthar kongaiyi lEmu yangida veeNi luncila pAtha kanceya ...... avamEthAn
veeRu koNduda nEva runthiyu mEyu lainthava mEthi ainthuLa mEka vanRaRi vEka langida ...... vekuthUram
pOya lainthuzha lAki nonthupin vAdi nainthena thAvi vempiye pUtha lanthani lEma yangiya ...... mathipOka
pOthu kangaiyi neerso rinthiru pAtha pangaya mEva Nangiye pUsai yuncila vEpu rinthida ...... aruLvAyE
theeyi sainthezha vEyi langaiyil rAva Nansira mEya rinthavar sEnai yuncela mALa venRavan ...... marukOnE
thEsa mengaNu mEpu ranthidu cUrma dinthida vElin venRava thEvar thampathi yALa anpusey ...... thiduvOnE
Ayi sunthari neeli pingalai bOka anthari cUli kuNdali Athi yampikai vEtha thanthiri ...... yidamAkum
Ala muNdara nAri RainjavOr pOtha kan-thanai yEyu kan-tharuL Avi nankudi meethi langkiya ...... perumALE.
|
வராளி |
வேயிசைந்தெழு தோள்கள்
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின் வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில் ராவ ணன்சிர மேய ரிந்தவர் சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு சூர்ம டிந்திட வேலின் வென்றவ தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர் போத கந்தனை யேயு கந்தருள் ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.
|
MANIG2 |
large |
ARUPADAI VEEDU |
SwAmimalai |
93 |
jOnpuri |
avAmaru vinAvasu
avA maruvinA vasudhai kANu madavArenum avArkanalil vAzhven ...... druNarAdhE
arA nugara vAdhaiyuRu thErai gathi nAdum aRivAgiyuLa mAl koN ...... dadhanAlE
sivAyavenu nAmam orukAlu ninaiyAdha thimirAkaranai vAven ...... draruLvAyE
thirOdha malamARum adiyArgaL arumAthavar dhiyAnamuRu pAdhan ...... tharuvAyE
uvAviniya kAnuvi nilAvu mayil vAganam ulAsamudan ERung ...... kazhalOnE
ulA udhaya bAnu sathakOdi uruvAna oLivAgu mayil vElang ...... kaiyilOnE
dhuvAdhasa buyAchala shadAnana varA siva suthA eyinar mAnan ...... budaiyOnE
surAdhipathi mAl ayanu mAlodu salAmidu suvAmimalai vAzhum ...... perumALE.
|
ஜோன்புரி |
அவாமுறு வினாவசு
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... |