இந்த இணையதளம் முருக பக்தர்களுக்காகவும், திருப்புகழ் குருஜி திரு ராகவன் வகுத்த வழியில் திருப்புகழ் பாடும் திருப்புகழ் அன்பர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. திரு அருணகிரிநாதர் வழங்கியுள்ள திருப்புகழ் (500 பாடல்களுக்கு மேல்), விருத்தங்கள், திருவகுப்பு, அனுபூதி, அந்தாதி போன்றவை இத்தளத்தில் தமிழ், ஆங்கிலம், தேவநாகரி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 6 மொழிகளின் வரி வடிவத்தில் கிடைக்கும்.
பாடலின் தலைப்பினை அந்தந்த மொழியில் சொடுக்க, அப்பாடலின் வரி வடிவங்கள் தமிழ், ஆங்கிலம், தேவநாகரி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தோன்றும்.
மேலும் இத்தளத்தின் மூலம் திருப்புகழ் நிகழ்ச்சிகளை, நிகழ்ச்சி மேலாண்மை (Event Manager) என்ற சுட்டியின் மூலம் வடிவமைக்கலாம்.
இத்தளம், வேதங்களின் சாரமாகவும், ஞானப் பொருளின் ரகசியமாகவும் அமைந்துள்ள திருப்புகழால் அனைவரும் பயன் பெற வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அறியாதவர்களும், தங்களுக்கு விருப்பமான மேற்சொன்ன மற்ற 5 மொழிகளின் வரிவடிவங்களில் திருப்புகழைப் படித்துப் பயன் பெறலாம். பாடலின் பொருள் விளக்கங்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கும். மேலும் இத்தளத்தை இணையத் தொடர்பின் மூலம் நவீன கைபேசி போன்ற மின் கருவிகளில் பயன் படுத்தலாம்.
இத்தளம் எல்லோரும் பயன்படுத்தும்படி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுட்டிகள் மற்றும் துணைச் சுட்டிகள் மூலம், இத்தளத்தை சுலபமாகப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, திருப்புகழ் பாடல்கள், திருவகுப்பு, விருத்தம், அந்தாதி போன்றவை களஞ்சியம் (Repository) என்ற சுட்டியில் கிடைக்கும். நிகழ்ச்சி உருவாக்கத்தை, நிகழ்ச்சி மேலாண்மை (Event Manager) என்ற சுட்டியில் பயன் படுத்தலாம். மின்புத்தகங்கள் (Flip Books) என்ற சுட்டியில் திருப்புகழ், மற்றும் இதர படைப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கக் கிடைக்கும்.
இத்தளத்தை கணினி, மற்றும் வெவ்வேறு திரை அளவுகள் கொண்ட கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தலாம். பழைய iPad-ல் பாடல்வரிகள் சரிவரத் தெரியாது. மூன்றாம் தலைமுறைக்கு (3rd generation and above) மேற்பட்ட iPad கருவிகளைப் பயன்படுத்தவும்.
இங்கு நிகழ்ச்சி என்பது பரவலாக திருப்புகழ் பாடல் நிகழ்ச்சியைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, படி விழா, வாராந்திர திருப்புகழ் பஜனை போன்றவை நிகழ்ச்சி எனப்படும். மேலும் நிகழ்ச்சியை உங்கள் விருப்பப் பாடல்களின் அட்டவணையாகவும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஒரு ஸ்தலத்தின் (கோயில் / க்ஷேத்திரம்) பாடல்களை மட்டும் பாடிப் பழகுவதற்காகத் தேர்வு செய்து ஒரு நிகழ்ச்சியாக உருவாக்கிக் கொள்ளலாம். கட்டாயமாக நடத்தப்படும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் பாடல் அட்டவணைத் தொகுப்பாக உருவாக்கிக் கொள்ளலாம்.
இரண்டு துணைச் சுட்டிகள் உள்ளன - (1) நிகழ்ச்சியில் பங்கெடுத்தல் (Attend Event) (2) நிகழ்ச்சி மேலாண்மை (Event Manager). முதல் சுட்டி மூலம், குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்ய அந்நாளுக்கான நிகழ்ச்சியோ, அல்லது பல நிகழ்ச்சிகள் அந்த நாளில் இருந்தால், குறிப்பிட்ட நிகழ்ச்சியைத் தேர்வு செய்ய அதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடல்களின் அட்டவணை திரையில் தோன்றும். அந்த அட்டவணையில் பாடலின் தலைப்பைச் சொடுக்க, பாடல் வரிகள் தோன்றும். ஆங்கிலத் தலைப்பைச் சொடுக்க ஆங்கிலத்திலும், தமிழ்த் தலைப்பைச் சொடுக்கத் தமிழிலும் பாடல் வரிகளைக் காணலாம்.
இரண்டாவது சுட்டி, இத்தகைய நிகழ்ச்சிகளை உருவாக்கும் வழியைக் காட்டுவது.
நிகழ்ச்சி மேலாண்மை (Event Manager) என்னும் சுட்டி மூலம் புதிய திருப்புகழ் நிகழ்ச்சிகளை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உருவாக்கிய நிகழ்ச்சியினை மாற்றியமைக்கலாம். நிகழ்ச்சிக்கான பாடல்களை திருப்புகழ், திருவகுப்பு, விருத்தங்கள்... என்று தேர்வு செய்யலாம், புது நிகழ்ச்சியை (Add Event) என்ற உருவாக்கும் போது, அந்நிகழ்ச்சிகான தேதி, நிகழ்ச்சியின் பெயர், நடக்கும் இடம் என்று கொடுக்கவேண்டும். மேலும் அந்நிகழ்ச்சியை கடவுச்சொல் (key) கொண்டு, பாதுகாப்பாக (locked event) வைக்கலாம். மேலும் ஒரே தேதிக்குப் பல நிகழ்ச்சிகளை உருவாக்கலாம்.
மேலும், புதிதாக ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும்போது, அந்நிகழ்ச்சியின் முதல் இரு பாடல்களாக "முருகா..முருகா"வும், "கைத்தல நிறைகனி"யும் தானாகவே ஆரம்பப் பாடல்களாகச் சேர்க்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு பொத்தான்கள்(Buttons)வெவ்வேறு செயல்கள்(Action) செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அந்நிகழ்ச்சிக்கான பாடல்களைத் தேர்வு செய்ய (select songs) என்ற பொத்தானை அமுக்க, பாடல்களின் அட்டவணை தோன்றும். வேண்டிய பாடல்களைச் சொடுக்க, அப்பாடல்கள் அந்நிகழ்ச்சிக்காக சேர்க்கப்படும். பாடல் அட்டவணையின் மேலே, தேர்ந்தெடுத்த பாடல்கள்(selected), தேர்ந்தெடுக்காத பாடல்கள்(not selected), அனைத்துப் பாடல்கள் (all songs) என்பதைத் தேர்ந்தெடுக்க, பாடல் அட்டவணை அதற்கேப்ப மாறும். அந்தப் பெட்டியின் பக்கத்தில் அந்நிகழ்ச்சிக்காக இது வரை எத்தனை பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்த நேரம் எவ்வளவு என்ற விவரம் காட்டப்படும்.
"தேடுதல்" (Search) பெட்டி மூலம் வேண்டிய பாடல்களைத் தேர்வு செய்யலாம். இது மிகவும் பயனுள்ள சிறப்பான அம்சமாகும். தேடும் சொல்லைப் பொறுத்து, அந்த அட்டவணை ஒன்றுக்கும் மேலான பொருத்தமான சொல் அமைந்த பாடல்களைக் காட்டும். ஆங்கிலத்தில் சொல்லை வரிப்படுத்தித் (transliterate) தேடு சொல்லாக இடும்போது இத்தகைய முடிவுகள் வரும். ஆங்கிலத்தில் கொடுக்கும் போது ஓரளவுக்குப் பொருத்தமான சொல்லைக் கொடுத்துத் தேட, அச்சொல்லைக் கொண்ட பாடல்கள் நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் வரும். தமிழ்ச் சொல்லிலும் பாடல்களைத் தேடலாம்.
நிகழ்ச்சிக்கான தெரிவு செய்த பாடல்களை அட்டவணையாக Excel Spreadsheet ஆக தரவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். "முருகா..முருகா" பாடல் தானாகவே, கடைசிப் பாடலாக, அந்த அட்டவணையில் (Excel Spreadsheet) சேர்க்கப்பட்டுவிடும்.
நிகழ்ச்சிக்கான அத்தனை பாடல்களின் முழுப் பாடல் வரிகளையும் PDF புத்தகமாக தமிழிலோ, ஆங்கிலத்திலோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேலும், நிகழ்ச்சியைக் கடவுச்சொல்(lock key) கொடுத்து, பாதுகாத்துக் கொள்ளலாம்(lock). இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நிகழ்ச்சியின் விவரங்களையோ, தெரிவு செய்த பாடல்களையோ, மாற்றியமைக்க வேண்டுமானால், சரியான கடவுச்சொல்லைக் கொடுக்க வேண்டும். ஆனால், பாதுகாக்கப்பட்ட நிகழ்ச்சியின் அட்டவணை தரவிறக்கம்(Excel spreadsheet), பாடல் புத்தகம் (PDF song book) போன்றவற்றை, கடவுச்சொல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடந்துபோன பழைய நிகழ்சிகளை யாராலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் இவற்றின், பாடல் அட்டவணையும்(Excel spreadsheet), பாடல் புத்தகமும் (PDF) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய நிகழ்ச்சியை பிரதி (copy) எடுக்கலாம். அது பாதுகாக்கப்பட்ட(locked) நிகழ்ச்சி எனில், பிரதி எடுக்கும் சமயம் சரியான கடவுச்சொல் தரவேண்டும்.
பிரதி எடுக்கும் பொத்தான் (Copy Event button) ஏற்கனவே உருவாக்கிய நிகழ்ச்சியை அப்படியே பிரதி(copy/duplicate) எடுக்க உதவுகிறது. இதன் மூலம் புதிதாக நிகழ்ச்சி உருவாக்கம் செய்யும் நேரம் மட்டுப்படுகிறது. பிரதி எடுத்த நிகழ்ச்சியின் பெயரில் "Copy of" என்ற முதல் வார்த்தைகளுடன், எந்த நிகழ்ச்சியிலிருந்து பிரதி எடுக்கப்பட்டதோ அதன் அடையாள எண் (ID) சேர்க்கப்படும். பிறகு பெயர் மற்றும் இதர விவரங்களையும், பாடல்களையும் வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
தொடுபொறியினை (mouse pointer) பொத்தன் மீது வைக்க, அந்தப் பொத்தானுக்கான உதவிக் குறிப்பு (tool tips) எந்தப் பணி அப்பொத்தானுடன் தொடர்புள்ளது என்று காட்டும். மேலும் எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ, அங்கெல்லாம் இத்தகைய உதவிக் குறிப்பு தோன்றும்படி இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
எத்தனை நிகழ்ச்சிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், இத்தளம் இயங்கும் சேவை மையத்தில் தரவு/தகவல்களுக்கு குறிப்பிட்ட அளவு சேமிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. தற்போது, கடந்த ஒரு வருட நிகழ்ச்சிகளின் விவரங்களைக் காணும் வசதியுள்ளது. சேமிப்பின் அளவு (storage), வேகத்தின் அளவு (bandwidh) வசதிகள் கூடுமாயின், இந்த வசதியை அதிகமாக்கலாம்.
பாடல் கால நேரம்(Song duration) என்பது உத்தேசமாக(approximately), எவ்வளவு நேரம் அந்தப் பாடல் பாடப்படுகிறது என்பதைக் காட்டுவது. இந்தக் கால அளவுகள், சாம்பர்க் (சிகாகோ) நகர திருப்புகழ் அன்பர்களால், அவர்கள் கற்று வரும் பாடல்களுக்காகச் சேகரிக்கப்பட்டது. இது ஒரு உத்தேச(approximate) கால அளவு மட்டுமே. நிகழ்ச்சிக்கான பாடல்களைத் தேர்வு செய்யும்போது அந்நிகழ்ச்சியின் மொத்த கால அளவை நிர்ணயம் செய்ய இது உபயோகப் படுகிறது.
குருஜி ராகவன் கற்றுக் கொடுக்கும் பாடல்கள் இத்தளத்தில் (Repository) ஒலிவடிவில் கேட்கலாம்.
பாடலுக்கான பொருள் விளக்கம் மற்ற தகவல்கள் இந்த இணைய தளத்தில் இருக்கிறது. பாடலுக்கான பொருள் இருக்குமாயின், பாடலைக் காட்டும் திரையில் 'விளக்கம்' என்ற பொத்தான் தோன்றும். அந்தப் பொத்தானை அழுத்த, அப்பாடலுக்கான விளக்கம் திரையில் தோன்றும்.
தங்கள் உலாவியின் உள்கட்டமைப்பில் (browser setting) மாற்றம் தேவைப்படலாம். இது ஒவ்வொரு உலாவியின் தன்மைப்படி மாறுபடும். ஒருவேளை "திடீர் ஜன்னல்" (pop-up windows) திறக்கும் வசதி மறுக்கப்பட்டிருந்தால், அதை அனுமதிக்கவும்.
இல்லை, இத்தளத்தில் பதிவு (Registration) எதுவும் செய்ய வேண்டாம். மேலும் இத்தளத்தைப் பயன்படுத்துபவரின் எந்த ஒரு தனிப்பட்ட விவரங்களை இத்தளம் கேட்காது, சேமிக்காது.
பிழைகளைச் சுட்டிக்காட்டவோ, அல்லது புதிய உள்ளடக்கம் இத்தளத்தில் இடவோ, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: