Event ID: 180 | Name: | Lalita Raj (LZ) Thiruppugazh Session | Total Songs: 23 | | |
|
1 (Page#) |
nAttai |
MURUGA MURUGA
muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
|
நாட்டை |
முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
|
|
1 |
nAttai |
Kaithala Niraikani
kaiththala niRaikani appamodu avalpori kappiya karimugan ...... adipENi
katridum adiyavar buddhiyil uRaibava kaRpagam enavinai ...... kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan maRporu thiraLbuya ...... madhayAnai
maththaLa vayiRanai uththami pudhalvanai mattavizh malarkodu ...... paNivEnE
muththamizh adaivinai muRpadu girithanil muRpada ezhudhiya ...... mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham acchadhu podiseydha ...... athidheerA
aththuyar adhukodu subbira maNipadum appunam adhanidai ...... ibamAgi
akkuRa magaLudan acchiRu muruganai akkaNam maNamaruL ...... perumALE.
|
நாட்டை |
கைத்தல நிறைகனி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே.
|
ThiruchendUr |
32 |
AbhOgi |
tharikkungkalai negizhkkumbara
tharikkungkalai negizhkkumpara thavikkungkodi ...... madhanEvit
Ragaikkunthani thigaikkunjchiRu thamizhththendralin ...... udanEnin
RerikkumpiRai yenappuNpadu menappunkavi ...... silapAdi
irukkumchilar thiruchchendhilai uraiththuyndhida ...... aRiyArE
arikkunjchathur maRaikkumpira manukkuntheri ...... varidhAna
adicchenjadai mudikkoNdidu maraRkumpuri ...... thavabAra
girikkumbanan munikkumkrupai varikkunguru ...... paravAzhvE
kiLaikkunthiRal arakkankiLai kedakkandRiya ...... perumALE.
|
ஆபோகி |
தரிக்கும் கலை
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே.
|
Pazhani |
80 |
bhairavi |
thimira vudhathi
thimira udhathi yanaiya naraka jenana mathanil ...... viduvAyEl
sevidu kurudu vadivu kuRaivu siRidhu midiyum ...... aNugAdhE
amarar vadivu madhiga kulamum aRivu niRaiyum ...... varavEnin
aruLa dharuLi enaiyu manadho dadimai koLavum ...... varavENum
samara mugavel asurar thamadhu thalaigaL uruLa ...... migavEneeL
saladhi alaRa nediya padhalai thagara ayilai ...... viduvOnE
vemara vaNaiyil inidhu thuyilum vizhigaL naLinan ...... marugOnE
midaRu kariyar kumara pazhani viravum amarar ...... perumALE.
|
பைரவி |
திமிர வுததி
திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே.
|
SwAmi malai |
112 |
amirthavarshiNi |
makara kEdha naththa
makara kEtha naththa nuruvi lAne duththu mathura nANi yittu ...... neRisErvAr
malaiya vEva Laiththa silaiyi nUdo Liththa valiya sAya kakkaN ...... madamAthar
ikazha vAsa mutRa thalaiye lAmve Luththu iLamai pOyo Liththu ...... vidumARu
idaivi dAthe duththa piRavi vEra Ruththun iniya thALa Lippa ...... thorunALE
akila mEzhu mettu varaiyin meethu mutta athira vEna daththu ...... mayilveerA
asurar sEnai kettu muRiya vAna varkku adaiya vAzhva Likku ...... miLaiyOnE
mikani lAve Riththa amutha vENi niRka vizhaisu vAmi veRpi ...... luRaivOnE
viraiya njAna viththai yaruLsey thAthai kaRka vinava vOthu viththa ...... perumALE.
|
அமிர்தவர்ஷிணி |
மகர கேத னத்த
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் ...... மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து ...... விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப ...... தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து ...... மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க வினவ வோது வித்த ...... பெருமாளே.
|
KongaNagiri |
165 |
manOlayam |
aingaranai yoththamana
ainkaranai oththa manam aimpulam agatri vaLar andhi pagal atra ninaiv ...... aruLvAyE
ambuvi thanakkuL vaLar senthamizh vazhuththi yunai anbodu thudhikka manam ...... aruLvAyE
thangiya thavath thuNarvu thandhadimai muththi peRa chandhira veLikku vazhi ...... aruLvAyE
thaNdigai ganappavusu eNdisai madhikka vaLar sambrama vidhath thudanE ...... aruLvAyE
mangaiyar sugaththai vegu ingidhamenutra manam undhanai ninaith thamaiya ...... aruLvAyE
maNdali karap pagalum vandha suba rakshai puri vandhaNaiya budhdhiyinai ...... aruLvAyE
kongiluyir petru vaLar then karaiyil appararuL koNdu udalutra poruL ...... aruLvAyE
kunjara mugaRkiLaiya kandhanena vetri peRu kongaNa girikkuL vaLar ...... perumALE.
|
மனோலயம் |
ஐங்கரனை யொத்தமன
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
|
ThirukkazhukunRam |
169 |
bhImplas |
vEdha veRpilE
vEdha veRpilE punaththil mEvi niRkum ...... abirAma vEdu vacchi pAdha padhma meedhu checchai ...... mudithOya
Adhariththu vELai pukka ARiratti ...... buyanEya AdharaththodA dharikka Ana budhdhi ...... pugalvAyE
kAdhu mugra veera badhra kALi vetka ...... makudAm AkAsa mutta veesi vitta kAlar baththi ...... imaiyOrai
Odhuviththa nAdhar kaRka Odhuviththa ...... muni nANa Orezhuththil ARezhuththai Odhuviththa ...... perumALE.
|
பீம்ப்ளாஸ் |
வேத வெற்பிலேபு
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
|
VirAlimalai |
199 |
kIravAni |
sIrAna kOla kAla
seerAna kOla kAla navamaNi mAlApi shEka pAra vekuvitha thEvAthi thEvar sEvai seyumuka ...... malarARum
seerAdu veera mAthu maruviya eerARu thOLu neeLum variyaLi seerAka mOthu neepa parimaLa ...... iruthALum
ArAtha kAthal vEdar madamakaL jeemUtha mUrva lAri madamakaL AthAra pUtha mAka valamida ...... muRaivAzhvum
ArAyu neethi vElu mayilumeynj njAnApi rAma thApa vadivamum ApAtha nEnu nALu ninaivathu ...... peRavENum
ErAru mAda kUda mathuraiyil meethERi mARi yAdu miRaiyavar EzhEzhu pErkaL kURa varuporu ...... LathikAram
eedAya vUmar pOla vaNikari lUdAdi yAla vAyil vithiseytha leelAvi sAra theera varathara ...... gurunAthA
kUrAzhi yAlmun veeya ninaipava needERu mARu bAnu maRaivusey gOpAla rAya nEya muLathiru ...... marukOnE
kOdAma lAra vAra alaiyeRi kAvEri yARu pAyum vayaliyil kOnAdu chUzhvi rAli malaiyuRai ...... perumALE.
|
கீரவாணி |
சீரான கோல கால
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
|
Madurai |
295 |
mOhanam |
kalaimEvu gnAna
kalaimEvu nyAnap pirakAsak kadalAdi Asaik ...... kadalErip
balamAya vAdhiR piRazhAdhE pathinyAna vAzhvaith ...... tharuvAyE
malaimEvu mAyak kuRa mAdhin mana mEvu vAlak ...... kumarEsA
silai vEda sEvaR kodiyOnE thiruvANi kUdaR ...... perumALE.
|
மோஹனம் |
கலைமேவு ஞான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
|
Madurai |
296 |
shanmukapriyA |
nI thaththuvamAki
nee thath thuvamAgi nEmath ...... thuNaiyAgi
bUthath dhayavAna bOdhaith ...... tharuvAyE
nAdhath dhoniyOnE nyAnak ...... kadalOnE
kOdhatr amudhAnE kUdaR ...... perumALE.
|
ஷண்முகப்ரியா |
நீ தத்துவமாகி
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
|
VruddhAchalam |
310 |
harikhAmbOdhi |
thirumozhi uraipeRa
thirumozhi uraipeRa aranuna dhuzhi paNi seyamuna maruLiya ...... kuLavOnE
thiRaluyar madhuraiyil amaNarai uyirkazhu theRipada maRugida ...... viduvOnE
oruvarum unadharuL parivilar avargaLin uRupadar uRumenai ...... aruLvAyO
ulaginil anaivargaL pugazhvuRa aruNaiyil orunodi thanilvaru ...... mayilveerA
karuvari yuRuporu kaNaivizhi kuRamagaL kaNinedhir tharuvena ...... munamAnAy
karumugil poruniRa arithiru marumaga karuNaiyil mozhitharu ...... mudhalvOnE
murugalar tharuvuRai amarargaL siRaivida muraNuRum asuranai ...... munivOnE
mudibavar vadivaRu suchikara muRaithamizh mudhugiri valamvaru ...... perumALE.
|
ஹரிகாம்போதி |
திருமொழி உரைபெற
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
|
VeLLikaram |
314 |
mAya mALava gauLai |
Sikarikal Idiya
ikarigaL idiya natanavil kalavi sevvi malark kadambu ...... siRuvALvEl
thirumuka samuka sathadhaLa muLari divya karath iNangu ...... porusEval
akiladi paRiya eRithirai aruvi aivana veRpil vanji ...... kaNavAendr
akilamum uNara mozhitharu mozhiyin alladhu poRpadhangaL ...... peRalAmO
nigarida ariya sivasutha parama nirvachana prasanga ...... gurunAthA
niraithigazh podhuvar neRipadu pazhaiya nelli marath amarndha ...... abirAmA
vegumuka gagana nadhimadhi yidhazhi vilva mudiththa nambar ...... peruvAzhvE
vikasitha kamala parimaLa kamala veLLi karath amarndha ...... perumALE.
|
மாயா மாளவ கௌளை |
சிகரிகள் இடிய
சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன்
றகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம நிர்வச னப்ர சங்க ...... குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
|
Podhu pAdalkaL |
325 |
brindhAvana sArangA |
athala sEda nArAda
adhala sEda nArAda akila mEru meedhAda abina kALi thAnAda ...... avaLOd andru
adhira veesi vAdhAdum vidaiyil Eru vAr Ada arugu bUtha vEthALam ...... avaiyAda
madhura vANi thAnAda malaril vEdha nAr Ada maruvu vAnu LOrAda ...... madhiyAda
vanaja mAmi yArAda nediya mAma nArAda mayilum Adi nee Adi ...... varavENum
gadhai vidAdha thOL veeman edhirkoL vALi yAlneedu karudha lArgaL mAsEnai ...... podiyAga
kadhaRu kAli pOymeeLa vijayan Eru thErmeedhu kanaka vEdha kOdUdhi ...... alaimOdhum
udhadhi meedhilE sAyum ulaga mUdu seerpAdha uvaNa mUrdhi mAmAyan ...... marugOnE
udhaya dhAma mArbAna prabuda dhEva mArAjan uLamum Ada vAzh dhEvar ...... perumALE.
|
பிருந்தாவன சாரங்கா |
அதல சேடனாராட
அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
|
Podhu pAdalkaL |
350 |
kAvadichindhu |
EttilE varai
EttilE varai pAttilE sila neettilE ini ...... dhendru thEdi
eettu mAporuL pAththuNAdh igal Etra mAna ...... kulangaL pEsik
kAttilE iyal nAttilE payil veettilE ...... ulagangaL Esa
kAkkai nAy nari pEyk kuzhAmuNa yAkkai mAyvadh ...... ozhindhidAdhO
kOttum Ayira nAtta nAduRai kOttu vAliba ...... mangai kOvE
kOththa vElaiyi lArththa sUrporu vER sikAvaLa ...... kongil vELE
pUttuvAr silai kOttu vEduvar pUtkai sEr kuRa ...... mangai bAgA
pUththa mAmalar sAththiyE kazhal pOtru dhEvargaL ...... thambirAnE.
|
காவடிச்சிந்து |
ஏட்டிலே வரை
ஏட்டி லேவரை பாட்டி லேசில நீட்டி லேயினி ...... தென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக லேற்ற மானகு ...... லங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில் வீட்டி லேஉல ...... கங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறை கோட்டு வாலிப ...... மங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு வேற்சி காவள ...... கொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர்குற ...... மங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல் போற்று தேவர்கள் ...... தம்பிரானே.
|
KAnchIpuram |
437 |
bahudhAri |
pokkuppaik kaththath
pokkuppaik kaththath thokkuppaik kuththup poyththeththuth thaththuk ...... kudilpENip
pocchaippich chaRpak kocchaicchoR kaRRup poRchithrak kacchuk ...... kiriyArthOy
thukkaththuk kaththiR chikkuppat tittuth thukkiththuk keyththuch ...... chuzhalAthE
suththacchith thaththup paththippath tharkkkoth thucchaRRarch chikkap ...... peRuvEnO
thikkuththik kaRRup paiththaththath thikkuch cheRpathrak kokkaip ...... porumvElA
cheppacchork kaththuch cheppoRRath thaikkuch checchaikkoth thoppith ...... thaNivOnE
kakkakkaith thakkak kakkatkak kakkik katkaththath tharkkup ...... periyOnE
kaRRaippoR Reththap peRRappoR chiRpak kacchikkut chokkap ...... perumALE.
|
பஹுதாரி |
பொக்குப்பைக் கத்தத்
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச் செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக் கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.
|
Chidambaram |
480 |
karaharapriyA |
kanagasabhai mEvum
kanaka sabai mEvum enadhu gurunAtha karuNai murugEsap ...... perumAL kAN
kanaka niRa vEdhan abayam ida mOdhu kara kamala jOthi ...... perumAL kAN
vinavum adiyArai maruvi viLaiyAdu viragu rasa mOhap ...... perumAL kAN
vidhi munivar dhEvar aruNagiri nAthar vimala sara jOthip ...... perumAL kAN
janaki maNavALan marugan ena vEdha satha magizh kumArap ...... perumAL kAN
saraNa sivakAmi iraNa kula kAri tharu muruga nAmap ...... perumAL kAN
inidhu vana mEvum amirtha kuRa mAdhodu iyal paravu kAdhal ...... perumAL kAN
iNai ilipa thOgai madhiyin magaLOdum iyal puliyur vAzh poR ...... perumALE.
|
கரஹரப்ரியா |
கனகசபைமேவும்
கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
|
Pazhamuthircholai |
496 |
dhEnuka |
karuvAgiya thAyudha
karuvAgiye thAy udharaththinil uruvAgave kAl kai urRuppodu kani vAy vizhi nAsi udaR sevi ...... naraimAdhar
kaiyilE vizha vEgi aNaiththuyil enavE miga meedhu thuyitriya karudhAy mulai Aramudhaththinil ...... inidhAgi
tharu dhAramum Agiya sutramu nala vAzhvu nilAdha porut padhi sathamAm idhuthAn ena utrunai ...... ninaiyAdha
chathurAy una thAL iNaiyaith thozha aRiyAdha nir mUdanai niR pugazh thanai Odhi meynyAnam uRach seyvadh ...... orunALE
seruvAy edhirAm asurath thiraL thalai mULaigaLodu niNath thasai thimir dhAthuLa bUtha gaNaththodu ...... varu pEygaL
thigudhA uNavAy udhiraththinai palavAy nari Odu kudiththida sila kUgaigaL thAmu nadiththida ...... adudheerA
aru mA maRaiyOrgaL thudhiththidu pugar vAraNa mAdhu thanaith thigazh aLisEr kuzhal mEvu kuRaththiyai ...... aNaivOnE
azhagAna pon mEdai uyarththidu mugil thAviya sOlai viyappuRu alaiyAmalai mEviya baththargaL ...... perumALE.
|
தேநுக |
கருவாகியெ தாயுத
கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே
செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு புகர்வாரண மாதுத னைத்திகழ் அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.
|
Thirukkadaiyur |
600 (Page#) |
sArangA |
abhirAmi andhAdhi (51 - 55)
sArangA Aranam porul enru, arul onru ilaadha asurar thangal muran anru azhiya munindha pemmaanum, mugundhanume, 'saranam saranam' ena ninra naayagi than adiyaar, maranam piravi irandum eydhaar, indha vaiyagaththe. 51
vaiyam, thuragam, madhagari, maa magudam, sivigai peyyum kanagam, peruvilai aaram,-pirai mudiththa aiyan thirumanaiyaal adith thaamaraikku anbu munbu seyyum thavamudaiyaarkku ulavaagiya sinnangale. 52
sinnany siriya marunginil saaththiya seyya pattum pennam periya mulaiyum, muththaaramum, pichchi moyththa kannangariya kuzhalum, kan moonrum, karuththil vaiththuth thannandhani iruppaarkku, idhu polum thavam illaiye. 53
Illaamai solli, oruvar thambaal senru, izhivubattu nillaamai nensil ninaiguvirel, niththam needu thavam kallaamai karra kayavar thambaal oru kaalaththilum sellaamai vaiththa thiriburai paadhangal sermin_gale. 54
Min aayiram oru mey vadivu aagi vilanguginradhu annaal, agam magizh aanandhavalli, arumaraikku munnaay, nadu engum aay, mudivu aaya mudhalvidhannai unnaadhu ozhiyinum, unninum, venduvadhu onru illaiye. 55
|
சாரங்கா |
அபிராமி அந்தாதி (51 - 55)
சாரங்கா 51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
|
Thirukkadaiyur |
601 (Page#) |
kApi |
abhirAmi andhAdhi (56 - 60)
kApi Onraay arumbi, palavaay virindhu, iv ulagu engumaay ninraal, anaiththaiyum neengi nirpaal-enran, nensinulle ponraadhu ninru puriginravaa! ip porul arivaar- anru aalilaiyil thuyinra pemmaanum, en aiyanume. 56
Aiyan alandhabadi iru naazhi kondu, andam ellaam uyya aram seyum unnaiyum porri, oruvar thambaal seyya pasundhamizhp paamaalaiyum kondu senru, poyyum meyyum iyambavaiththaay: idhuvo, un_dhan meyyarule 57
Arunaambuyaththum, en siththaambuyaththum amarndhirukkum tharunaambuyamulaith thaiyal nallaal, thagai ser nayanak karunaambuyamum, vadhanaambuyamum, karaambuyamum, saranaambuyamum, allaal kandilen, oru thansamume. 58
Thansam piridhu illai eedhu alladhu, enru un thavannerikke nensam payila ninaiginrilen; orrai neelsilaiyum ansu ambum ikku alaraagi ninraay: ariyaar eninum pansu ansu mel adiyaar, adiyaar perra paalaraiye. 59
Paalinum sol iniyaay! pani maa malarp paadham vaikka- maalinum, thevar vananga ninron konrai vaar sadaiyin melinum, keezhnninru vedhangal paadum meyp peedam oru naalinum, saala nanro-adiyen mudai naayth thalaiye 60
|
காபி |
அபிராமி அந்தாதி (56 - 60)
காபி 56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்-- அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக் கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-- மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே
|
|
473 (Page#) |
kAvadichindhu |
Seerpaadha Vaguppu - 1
udhadhiyidai kadavu marakatha varuNa kula thuraga upalaLitha kanakaratha sathakOti sooriyargaL
udhayamena adhikavidha kalapa kaga mayilin misai yugamudivin iruLagala orujOthi veesuvadhum
udalum udal uyiru nilai peRudhal poruLena ulagam oruvivaru manubavana sivayOga saadhanaiyil
ozhugum avar piRidhu paravasam azhiya vizhi serugi uNarvu vizhi kodu niyadhi thamadhoodu naaduvadhum
uru enavum aru enavum uLadhenavum iladhenavum uzhaluvana parasamaya kalai aaravaaram aRa
urai avizha uNarvavizha uLamavizha uyiravizha uLapadiyai uNarumavar anuboothi aanadhuvum
uRavumuRai manaivimaga enum alaiyil enadhidhaya uruvudaiya malinabava jalaraasi ERavidum
uRupuNaiyum aRimukamum uyaramarar maNimudiyil uRaivadhuvum ulaiviladhum adiyEn manOrathamum
idhazhi vegu muka gagana nadhi aRugu thaRukaN ara imakiraNa tharuNa udu pathi sEr jadaamavuli
iRaimagizha udaimaNiyod aNisakalamaNi galena imaiyamayil thazhuvum oru thirumaarbil aaduvadhum
imaiyavargaL nagariliRai kudipugudha nirudharvayiR eRipugudha uragarpathi abishEkam aayiramum
ezhupilamu neRu neRena muRiya vadakuvad idiya iLaiya thaLar nadai pazhagi viLaiyaadal kooruvadhum
iniyakani kadalaipayaR odiyalpori amudhu seyum ilaguvegu katavikata thadabaara mEruvudan
igali mudhu thigirigiri neriya vaLai kadal kadhaRa ezhu buviyai oru nodiyil valamaaga Oduvadhum
eRuzhi puli karadi ari kari kadamai varudai uzhai iralai marai iravu pagal iraithEr kadaataviyil
eyinar idum idhaN adhanil iLagu thinai kiLi kadiya inidhu payil siRumi vaLar punameedh ulaavuvadhum
mudhala vinai mudivil irupiRai eyiRu kayiRukodu mudhu vadavai vizhi suzhala varukaala dhootharkeda
muduguvadhum aruNeRiyil udhavuvadhum ninaiyum avai mudiya varuvadhum adiyar pagai kOti saaduvadhum
mogumogena madhupa mural kuravu viLavinadhu kuRu muRiyu malar vakuLa dhaLa muzhuneela theevaramum
murugu kamazhvadhum akila mudhanmai tharuvadhum viratha munivar karudhariya thava muyalvaar thapO balamum
muruga saravaNa magaLir aRuvar mulai nugarum aRu muka kumara saraNamena aruLpaadi aadimiga
mozhi kuzhaRa amudhu thozhudhur ugumavar vizhi aruvi muzhuguvadhum varugavena aRaikoovi aaLuvadhum
mudiya vazhi vazhi adimai enum urimai adimai muzhu dhulag aRiya mazhalai mozhi kodu paadum aasukavi
mudhala mozhivana nipuNa madhupa mugar idha mavuna muguLa parimaLa nikila kavimaalai sooduvadhum
madhasikari kadhaRi mudhu mudhalai kavarthara nediya madu naduvil veruvi oru visai aadhimoolam ena
varukaruNai varadhan igal iraNiyanai nudhi ugirin vagirum adal ari vadivu kuRaLaagi maa baliyai
valiya siRai ida veLiyin mukadu kizhipada mudiya vaLaru mugil nirudhan iru padhu vaagu boodharamum
makutam orupadhu muRiya adu pagazhi vidu kurisil maruga nisicharar dhaLamum varu thaarakaa suranum
madiya malai piLavu pada makara jalanidhi kuRugi maRugi muRaiyida muniyum vadivEla neelagiri
maruvu gurupathi yuvathi bavathi bagavathi madhura vachani bayiravi gavuri umaiyaaL thrisoola dhari
vanajai madhupathi amalai vijayai thiripurai punidhai vanithai abinavai anagai abiraama naayaki than
madhalai malai kizhavan anubavan abayan ubaya chathur maRaiyin mudhal nadu mudivin maNanaaRu seeRadiyE
|
காவடிச்சிந்து |
சீர்பாத வகுப்பு - 1
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும்
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில்
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும்
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய ...... கலையார வாரமற
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும்
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும்
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும்
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும்
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும்
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும்
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும்
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில்
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும்
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும்
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும்
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும்
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும்
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும்
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும்
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன்
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே.
|
|
500 (Page#) |
senjurutti |
nAdha vindhuka lAthI
nAdha vindhuka lAdhee namOnama vEdha manthraso rUpA namOnama njyAna paNditha sAmee namOnama ...... vegukOdi
nAma sambuku mArA namOnama bOga anthari bAlA namOnama nAga bandhama yUrA namOnama ...... parasUrar
sEdha dhaNdavi nOdhA namOnama geetha kiNkiNi pAdhA namOnama dheera sambrama veerA namOnama ...... girirAja
dheepa mangaLa jOthee namOnama thUya ambala leelA namOnama dhEva kunjari bAgA namOnama ...... aruLthArAy
eedha lumpala kOlA lapUjaiyum Odha lunguNa AchA raneethiyum eera munguru seerpA dhasEvaiyu ...... maRavAdha
Ezhtha lampugazh kAvE riyAlviLai sOzha maNdala meedhE manOhara rAja gembira nAdA LunAyaka ...... vayalUrA
Adha rampayil ArU rarthOzhamai sErdhal koNdava rOdE munALinil Adal vempari meedhE RimA kayi ...... laiyil Egi
Adhi antha ulA Asu pAdiya sErar kongu vaikAvUr nanAdadhil Avinan kudi vAzhvAna dhEvargaL ...... perumALE.
|
செஞ்சுருட்டி |
நாத விந்துக லாதீ
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
|
|
505 (Page#) |
madhyamAvathi |
ERumayi lERiviLai
ERu mayil ERi viLaiyaadu mukam ondrE eesarudan nyaana mOzhi pEsu mukam ondrE
kooRum adiyaargaL vinai theerkku mukam ondrE kundruruva vElvaangi nindra mukam ondrE
maaRupadu soorarai vadhaithhta mukam ondrE vaLLiyai maNam puNara vandha mukam ondrE
aaRumugam aanaporuL nee aruLal vENdum aadhi aruNaachalam amarndha perumaaLE
|
மத்யமாவதி |
ஏறுமயி லேறிவிளை
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
|
|
1 (Page#) |
nAttai |
MURUGA MURUGA
muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
|
நாட்டை |
முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
|